வாரிசு,துணிவு படத்திற்கு நள்ளிரவு காட்சிக்கு அனுமதி!ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

By Ajmal KhanFirst Published Jan 18, 2023, 1:45 PM IST
Highlights

வாரிசு, துணிவு திரைப்படத்தின் மூலம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்காக  நள்ளிரவு காட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு காட்சிக்கு அனுமதி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் ஃபனிந்த ரெட்டி ஆகிய 3பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். முதல்வர் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைப்பதாகவும் தெரிவித்தார். 

நான் ராஜினாமா செய்த அடியாள்.! நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம்.! டுவிட்டரில் மோதிக்கொள்ளும் சூர்யா-காயத்ரி

தவறாக பயன்படுத்திய அதிகாரம்

வாரிசு, துணிவு திரைப்படத்திற்கு அதிகாலை 1 மணி முதல் 4மணி வரை பல்வேறு  சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து தன்னுடைய  மகன் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு சிறப்பு காட்சிக்கான உத்தரவை வழங்கியதாக தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு லஞ்ச ஒழிப்பு சாட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் விசாரணை நடத்தக்கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தாக தெரிவித்தார்.

Important Press Meet 🔴

தமிழக முதல்வர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது🔥🔥🔥 pic.twitter.com/CT3mu0EaCC

— Voice Of Savukku Shankar (@voiceofsavukku)

 

நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார். சட்ட விரோதமாக 950ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.எனவே இதற்கான ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை என கூறினார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்ததாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

வீரவணக்க நாள் கூட்டம்..! அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி

ஆளுநரிடம் முறையிடுவேன்

ஆளுநர் திடீரென டெல்லி சென்றது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக அரசு ஆளுநர் மாளிகையில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகளை வைத்து ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பதாக ஆளுநருக்கு தகவல் வந்துள்ளதாகவும், இது அரசு அதிகாரி அளித்த வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கோபாலபுரத்தை மகிழ்விப்பதை விட்டு விட்டு கோயில் ஊழியர்களின் உயிரை காப்பாற்றுங்க- சேகர்பாபுக்கு அண்ணாமலை அட்வைஸ்

click me!