ஆளுநரின் முற்றுப்புள்ளி வரவேற்கதக்கது.! இனியாவது அரசின் செயல்பாட்டில் மூக்கை நுழைக்காமல் இருக்கனும்- காங்கிரஸ்

Published : Jan 18, 2023, 02:25 PM IST
ஆளுநரின் முற்றுப்புள்ளி வரவேற்கதக்கது.! இனியாவது அரசின் செயல்பாட்டில் மூக்கை நுழைக்காமல் இருக்கனும்- காங்கிரஸ்

சுருக்கம்

தமிழ்நாட்டின் நலன் கருதி சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு.? தமிழகம்.?

தமிழ்நாட்டை தமிழகம் என்று கூறுவது தான் சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என், ரவி கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என கூறியிருந்தார். 

தமிழ்நாட்டை தமிழகம் என அழைத்தது ஏன்..?ஆளுநர் ஆ,ர்.என். ரவி திடீர் விளக்கம்

ஆளுநர் முற்றுப்புள்ளி- வரவேற்க்கதக்கது

இதனையடுத்து இது தொடர்பாக காங்கிரஸ் சட்ட மன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (18.01.2023) தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சையை ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மிகவும் சிறப்பு. வரவேற்கத்தக்கது விஷயம். இதேபோல, தமிழ்நாட்டின் நலன் கருதி சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும். 

மூக்கை நுழைக்காமல் இருக்கனும்

இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்களின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார். மக்களும் ஆளுநரை வாழ்த்துவார்கள். நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள், செயல்பாடுகளில் ஆளுநர் அவர்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. இதனால், ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

வாரிசு,துணிவு படத்திற்கு நள்ளிரவு காட்சிக்கு அனுமதி!ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!