சுனாமியை விட மோசமானது பண மதிப்பிழப்பு நடவடிக்கை !! போட்டுத் தாக்கிய ப.சிதம்பரம் !!!

First Published Oct 29, 2017, 6:47 AM IST
Highlights
Ex Minister chidambaram speake abour demonitisation


பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற மோடி அரசின் நடவடிக்கைகள் நாட்டிற்கு சுனாமியை விட மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில்  நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கம் ஒன்றில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் பங்கேற்றுப் பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறான கொள்கை முடிவுகளை நிறைவேற்றி வருகிறது என்றும்  குறிப்பாக  பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தியது  போன்றவை மிகப் பெரிய தோலிவி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளில்  மோடி அரசு  முறையற்ற அணுகுமுறையை கையாண்டு விட்டது என்றும்,  இது முற்றிலும் தவறான செயலாகும் என்றும் நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இதில் இத்தனை வேகம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

குறிப்பாக பணமதிப்பீட்டு விவகாரம் என்பது ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்து விட்டது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜிஎஸ்டியைப் பொறுத்தவரையில் அதனை அமலாக்குவதில் மோடி அரசு ஆவேசமாக செயல்பட்டு விட்டது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.


ஜி.எஸ்.டி. முறையை நிதானமாக அமல்படுத்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு அது குறித்து புரிதலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த ஜி.எஸ்.டி. கட்டமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்..

2004ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பேரழிவான சுனாமியை விட இந்த மோடி  அரசு பெரும் அழிவை ற்படுத்தி விட்டது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும் என்று தெரிவித்தார்..

தான் பதவியில் இருந்த போது அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கூடியிருந்தால் அது தவறானது என்று எடுத்து கூறியிருப்பேன். அதையும் மீறி கட்டளையிட்டிருந்தால் நான் எனது நிதியமைச்சா் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன் என்றும் சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

click me!