திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கடலுார் எம்எல்ஏ அய்யப்பன் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கடலுார் எம்எல்ஏ அய்யப்பன் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பன் விளக்கமளித்துள்ளார்.
கடலுார் தொகுதி எம்எல்ஏ அய்யப்பனுக்கும் கடலுார் கிழக்கு மாவட்ட செயலரும், வேளாண் துறை அமைச்சருமான பன்னீர்செல்வத்திற்கும் எழாம் பொருத்தம். நகர்ப்புற உள்ளாட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய நகராட்சி தலைவர் உள்ளிட்ட சில பதவிகளை, திமுகவினர் கைப்பற்றினர். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புகார் தெரிவித்தார். அக்கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- எனக்கு பல கோடி கடன் இருக்கு.. இந்த மருத்துவமனையை பேங்க்ல லோன் போட்டு தான் கட்றேன்.. முன்னாள் அமைச்சர் காமராஜ்
ஆனால், அய்யப்பன் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்யவில்லை. கடலுார் மாநகராட்சி மேயராக தன் ஆதரவாளரை கொண்டு வருவதற்காக கவுன்சிலர்களை கடத்தி தன் கட்டுப்பாட்டில் அய்யப்பன் வைத்திருந்தார். அவரது முயற்சியை பன்னீர்செல்வம் முறியடித்து, தன் ஆதரவாளரை மேயராக தேர்வு செய்தார். இது தொடர்பான புகார் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும் கட்சி கட்டுப்பாட்டை மீறிய அய்யப்பன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கையை, திமுக மேலிடம் எடுக்கவில்லை.
இதையும் படிங்க;- கடலூர் திமுக என்றால் இப்படியா.? ஒரு பக்கம் எம்.பி.. இன்னொரு பக்கம் எம்எல்ஏ.. ஸ்டாலினுக்கு கண்ணாமூச்சி ஆட்டம்!
இந்நிலையில், அதிருப்தியில் இருந்து வரும் அய்யப்பன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதனை திமுக எம்எல்ஏ அய்யப்பன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். திமுகவில் தான் தொடர்ந்து செயல்படுவேன். தற்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. அது முழுக்க முழுக்க வதந்திதான். திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என கூறியுள்ளார்.