பொதுக் குழுவை தூக்கி ஓரம்போடு... எடப்பாடி தலைமீது தொங்கும் கத்தி.. 11 ஆம் தேதி நடக்கப்போகும் டுவிஸ்ட். ??

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2022, 9:10 AM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற துடித்து வரும் நிலையில், அவருக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற துடித்து வரும் நிலையில், அவருக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு  சிறு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒருவேளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் பட்சத்தில் அது எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம் என்ற சூழல் உள்ளது. இதுதான் அவரது தரப்பினரின் கலக்கத்திற்கு காரணமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தன்வசம் வைத்திருந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை சட்ட விதிகளுக்கு புறம்பாக தனது உறவினர்களுக்கு வழங்கினார் என கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில் மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை அதாவது அதிமுக பொதுக்குழு நடைபெறும் அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்: எனக்கு பல கோடி கடன் இருக்கு.. இந்த மருத்துவமனையை பேங்க்ல லோன் போட்டு தான் கட்றேன்.. முன்னாள் அமைச்சர் காமராஜ்

அதிமுகவின் 10 வருட ஆட்சியில் கடைசி நான்காண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தன்வசம் வைத்திருந்த அவர் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும், இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடுத்தார்.

இதையும் படியுங்கள்: பொதுக்குழு காலை 9.30 மணிக்கு.. தீர்ப்பு 9 மணிக்கு.. நீதிபதி வைத்த செம்ம ட்விஸ்ட்.. பீதியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், இதில் சிறப்பு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார். அதாவது ஒட்டன்சத்திரம்- தாராபுரம்-அவிநாசி ஆகிய நான்கு வழிப்பாதைகளுக்கு திட்ட மதிப்பு 700 கோடி என்ற நிலையில் அதை 1,500 கோடியாக உயர்த்தி தனது உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது என்றும், இதேபோல்  வண்டலூரில் இருந்து வாலாஜா சாலை வரை நான்கு வழி சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற 200 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தை தனக்கு நெருக்கமானவர்களான நாகராஜன் என்பவருக்கு வழங்கியதாகவும், தமிழகம் முழுவதும் இது போல நெடுஞ்சாலை துறை தொடர்பாக ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் 4,800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாகவும், தன்வசம் வைத்திருந்த நெடுஞ்சாலைத்துறையில் முதலமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எடப்பாடி முறைகேட்டில் ஈடுபட்டார் என்றும் ஆர்.எஸ் பாரதி தனது மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதில் நேர்மையான விசாரணை நடக்காது, எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், இதற்கான வழக்குதான் வரும் 11ம் தேதி (பொதுக் குழு அன்று)விசாரணைக்கு வர உள்ளது. ஒருபுறம் அதிமுக பொதுக்குழுவில் எப்படியாவது பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார், அதேபோல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு விடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

அதே நேரத்தில் அதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் வழக்கு மேல் வழக்கு தொடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார், இதேபோல் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களான எஸ்.பி வேலுமணியின் வலது கரமான சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் காமராஜ், இன்னும் பிற மாஜி அமைச்சர்களை குறிவைத்து அடுத்தடுத்து வருமானவரித்துறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடந்து வருவது எடப்பாடி தரப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதையே சமாளிக்க முடியாமல் அவரும் அவரசு சகாக்க்களும் திணறி வரும் நிலையில் 11 ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில் வர உள்ள ஊழல் வழக்கு என்ன ஆகுமோ என அவரது தரப்பினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். 

ஒருவேளை அன்றைய விசாரணையில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் அது எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் தீர்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பொதுக்குழு நடந்து அதில் பொதுச்செயலாளராக தேர்வாகி விடவேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கும் எடப்பாடிக்கு அன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள வழக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். எது எப்படியோ எடப்பாடி சருக்கினால் சரி என்று காத்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் இந்த விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர். 
 

click me!