முதலில் நுபுர் சர்மாவை கைது பண்ணுங்க.. அப்புறம் லீனா மணிமேகலை கிட்ட வாங்க.. ஓங்கி அடிக்கும் முத்தரசன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2022, 11:09 AM IST
Highlights

காளியை இழிவு செய்து விட்டார் என லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்துபவர்கள் நபிகள் நாயகம் குறித்து விமர்சித்த நுபுர் சர்மாவை   ஏன் கைது செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காளியை இழிவு செய்து விட்டார் என லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்துபவர்கள் நபிகள் நாயகம் குறித்து விமர்சித்த நுபுர் சர்மாவை   ஏன் கைது செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி பதவி இளையராஜாவுக்கு பொருத்தமானதுதான் என தெரிவித்துள்ள அவர், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதால்தான் அவரை விமர்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 8வது மாநாடு நேற்று நடைபெற்றது. உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். அப்போது மாவட்ட குழுவினரை அவர் தேர்வு  செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முத்தரசன், நாடு இப்போது ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது, நாட்டில் எப்படியாவது மதத்தின் அடிப்படையில் கலவரத்தை தூண்ட வேண்டும், மக்களை மதரீதியாக மோத விட வேண்டும் என ஆர்எஸ்எஸ் பாஜக திட்டமிடுகிறது.

இதையும் படியுங்கள்: மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி..

இதையும் படியுங்கள்: அய்யோ ஆண்டவா.. இந்தியாவிலும் நுழைந்தது குரங்கு காய்ச்சல்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்.

அதன்மூலம் பாஜக ஆதாயம் தேட முயற்சிக்கிறது, இந்து தெய்வம் காளியை ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை அவமதித்து விட்டார் என அவரை கைது செய்ய வேண்டும் என கூறுபவர்கள் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என ஏன் கூறுவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதேபோல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி  வேட்பாளராக நிறுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் ஆனால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் கூறினார். திரௌபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தி விட்டு மறுபுறம் தேனி மாவட்டம் உட்பட மலைப்பகுதிகளில் வசிக்கும்  பழங்குடியினரை வெளியேற்றவும், கால்நடை மேய்ச்சலுக்கு  தடை விதிக்கப்பட்டு வருவதை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்பதை கேரளா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் உயர்த்த வேண்டும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தின் தமிழக மக்களின், தமிழக விவசாயிகளின்  வாழ்வாதாரத்திற்காக குரல்கொடுக்கும் என அவர் கூறினார். நியமன எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா, வீராங்கனை பிடி உஷா ஆகியோர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், உண்மையிலேயே எம்பி பதவி என்பது இளையராஜாவுக்கு பொருத்தமானதுதான். ஆனால் அம்பேத்கருடன் மோடியை அவர் ஒப்பிட்டதால்தான் அவர் விமர்சிக்க படுகிறார்.

அதே நேரத்தில் இளையராஜாவுக்கு பதவி கொடுத்துவிட்டு பாஜக மதவெறி அரசியல் செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தினார். ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக சுய சிந்தனையுடன் செயல்படுவதில்லை, அதிமுகவை பாஜக முழுமையாக கட்டுப்படுத்தி வருகிறது இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் சோதனைகள் வரவேற்கத்தக்கது. நெருப்பில் குதித்து தன்னை நிரூபித்து சீதையை போல அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

 

click me!