ஓபிஎஸ் தரப்பு அவர் மீது குறி வைத்துள்ளது. அவர் மீதான புகார்களை ஓபிஎஸ் தரப்பு கிளப்பி வருவதால், விரைவில் ரெய்டு நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி உதயகுமார், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு எதிரான முகமாக முன்னிறுத்தப்படுகிறார். ஓபிஎஸ் தரப்பு அவர் மீது குறி வைத்துள்ளது. அவர் மீதான புகார்களை ஓபிஎஸ் தரப்பு கிளப்பி வருவதால், விரைவில் ரெய்டு நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது இதற்கு துவக்கமாக ஓபிஎஸ் தரப்பு ஆர்.பி உதயகுமார் மீது புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் கடந்த 2016 -2021ஆண்டுவரை வருவாய்த்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆர்.பி.உதயகுமார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து குவித்துள்ளதாக கடந்த 17ஆம் தேதி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், புகார்தாரரிடம் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு..பிரதமர் மோடி படத்தின் மீது கருப்பு மை வீச்சு.. பரபரப்பை ஏற்படுத்திய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் !
ஆர்.பி.உதயகுமார் பதவியில் இருந்தபோது அம்மா ட்ரஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுபொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் அதிகளவிற்கான வருமானத்தை காட்டியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புகார் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !