செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு... செஸ் விளையாடி மகிந்த மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Jul 27, 2022, 8:10 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட அரங்கை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு செஸ் விளையாடி மகிழ்ந்தார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட அரங்கை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு செஸ் விளையாடி மகிழ்ந்தார். இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நாளை பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 44 ஆவது தொடர் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக நடத்தும் வாய்ப்பு தமிழக அரசு மூலம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: கபடி போட்டியின்போது உயிரிழந்த சஞ்சய் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அதனால் தமிழக அரசு போட்டியை நடத்த உடனடியாக 100 கோடி ரூபாயை ஒதுக்கியதுடன், விழா ஏற்பாடுகளை உடனடியாக துவக்கியது. போட்டி நடைபெறுவதற்கான அரங்கம், வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்கான சொகுசு அறைகள் தயார் செய்தல் என பல்வேறு பணிகள் சில நாட்களில் முடிந்து விட்டன. போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார். அதோடு, வீரர்களை அழைத்து வருவதற்கான ஒத்திகையும் நடைபெற்றது. விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:  உலக நாடுகளுக்கு தெரிந்தவர் மோடிதான்.. எங்கே பிரதமர் போட்டோ..?? ஸ்டாலினை உலுக்கி எடுக்கும் ஆளுநர் தமிழிசை

அதேநேரத்தில் செஸ்போட்டிக்கான தொடக்க விழா  நாளை மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்  நடைபெற உள்ளது. தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார்.  இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் செஸ் விளையாடி மகிழ்ந்தார். மேலும் விளையாட்டு போட்டிகள் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். 

click me!