முதலமைச்சர் விரைவில் குணமாகி மக்களுக்காக பணியாற்றுவார் - தமிழிசை

First Published Oct 17, 2016, 7:46 AM IST
Highlights


தமிழக முதலமைச்சர் உடல்நலம் பெற்று விரைவில் தமிழக மக்களுக்காக பணியாற்றுவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் ஈரோட்டில் தெரிவத்தார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய தருணம் இருந்த நேரத்தில் அதனை செய்யாமல் இருந்து விட்டு தற்போது விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக கூறி அரசியல் லாபத்துக்காக போராட்டங்களை நடத்த பல அரசியல் கட்சிகள் தூண்டி வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

பாரதிய ஜனதா கட்சிதான் விவசாயிகளுக்கு மத்திய வரவு செலவு திட்டத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பயிர் பாதுகாப்பு, கரும்பு நிலுவை தொகை வழங்குதல், வட்டியில்லா கடன் உதவி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கபட்ட ஸ்ரீ ஜா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யபட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் .எனவே விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழிசை கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக முதல்வர் உடல்நலம் பெற்று விரைவில் தமிழக மக்களுக்காக பணியாற்றுவார் எனவும் தமிழிசை தெரிவத்தார்.

  

click me!