ஆந்திராவில் என்.டி. ராமாராவ் முதல்வராக இருந்தபோது அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சியையும் ஆட்சியை கைப்பற்றினார். தமிழகத்திலும் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவில் ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்று பாஜகவினர் வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை உள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி இறந்து ஆறு நாட்கள் கடந்து விட்டன. சாத்தான்குளம் சம்பவத்துக்குகு உடனே ஓடினார்கள் திமுகவினர். ஸ்ரீமதி இந்து என்பதால் அவர்கள் செல்லவில்லை. ஸ்ரீமதி குடும்பத்துக்கு உடனடியாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சைக்கிளில் செல்வது, அதை புகைப்படமாக எடுத்து போடுவதும்தான் டிஜிபியின் வேலையா? ஆந்திராவில் என்.டி. ராமாராவ் முதல்வராக இருந்தபோது அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சியையும் ஆட்சியை கைப்பற்றினார். தமிழகத்திலும் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- திமுகவிற்கு எதிராக அடுத்த ஊழல் புகார்...! கவர்னரை 21 ஆம் தேதி சந்திக்க அண்ணாமலை திட்டம்
ஹெச். ராஜாவின் இந்தப் பேட்டியின் மூலம் திமுகவிலும் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாவார் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மாமனாரும் அன்றைய முதல்வருமான என்,டி. ராமாராவின் ஆட்சியை கைப்பற்றியது அரசியல் உலகில் பரபரப்பானது. 1994-ஆம் ஆண்டில் ஆட்சியை என்.டி.ராமாராவ் ஆட்சியைப் பிடித்தார். அவருடைய அமைச்சரவையில் மருமகன் சந்திரபாபு நாயுடு ஓர் அமைச்சராக இருந்தார். 1993இல் லட்சுமி பார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார் என்.டி.ராமாராவ். இது அவருடைய குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் இருந்தது. அதோடு ராமாராவ் ஆட்சி நிர்வாகத்தில் லட்சுமி பார்வதி தலையீடு இருப்பதாக குடும்பத்தில் புகைச்சல் கிளம்பிக்கொண்டிருந்தது.
இதையும் படிங்க;- பால் தாக்கரே - கருணாநிதி குடும்பங்களுக்கு இடையே என்னவெல்லாம் ஒற்றுமை.? ஒரு முடிவில் இருக்கும் பாஜக!
அந்த விவகாரம் வெடித்து 1995-இல் சந்திரபாபு நாயுடு கட்சியையும் ஆட்சியையும் என்.டி.ராமாராவிடம் ஒருசேர கைப்பற்றினார். ராமாராவ் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் அவரால் முடியவில்லை. தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே, ஒரு வாகனத்தில் ஏறியபடி ஒலிபெருக்கியில் கெஞ்சி என்.டி.ராமாராவ் அழைத்த புகைப்படம் அன்று பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த விஷயத்தில் அன்று ராமாராவ் குடும்பத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்தும் முயன்று பார்த்தார். ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை. இறுதியில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் உடல்நலம் குன்றி என்.டி.ராமாராவ் 1996இல் காலமானார். இதுதான் என்.டி.ராமாராவ் வீழ்ந்த கதை. சந்திரபாபு நாயுடு உருவான கதை.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை கவிழ்த்துவிட்டு ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்த பிறகு, திமுகவிலும் ஏக்நாத் ஷிண்டே வருவார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி அக்கட்சியைச் சேர்ந்த பலரும் பேசி வருகிறார்கள். தற்போது ஹெச். ராஜா திமுகவில் சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை இருப்பதாக பழைய கதைக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்திலிருந்தே ஏக்நாத் ஷிண்டே.. ஆப்பு வைக்க பாஜக போடும் கணக்கு?