கொடநாடு கொலை வழக்கு..! இபிஎஸ் ஆதரவாளரை கைது செய்ய திட்டம்..? சூடு பிடிக்கும் சிபிசிஐடி விசாரணை

By Ajmal Khan  |  First Published Oct 9, 2022, 8:54 AM IST

கொடநாடு வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரை கைது செய்ய தீவிரநடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜெயலலிதா பங்களாவில் கொலை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பிளவு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை தோட்டம்   நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் உள்ளது. இந்த  எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சயான், வாளையாா் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கைது செய்தனா். முன்னதாக கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கேரளாவிற்கு தப்பிச்செல்லும்போது நடந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர் தப்பினார்.

Tap to resize

Latest Videos

கொடநாடு வழக்கு-சிபிசிஐடிக்கு மாற்றம்

இ இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சேலம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.  மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பாா்வையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கொடநாடு வழக்குகள் தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை காவல் துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது. மேலும்  சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகரும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக இருக்க கூடிய ஒருவருக்கு  இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினரும் சாட்சி அளித்துள்ளனர். 

சர்வாதிகாரத்தின் வடிவம் அவர்.. கீழ்த்தரமான பொதுக்குழு.! முதல் முறையாக எடப்பாடியை விளாசிய ஓ.பன்னீர்செல்வம் !

சிக்குகிறாரா சேலம் மாவட்ட நிர்வாகி

இந்தநிலையில் கொடநாடு கொலை வழக்கில் சிபிசிஐடி டி எஸ் பி சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.  இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

உலகில் உள்ள மதங்களுக்கு எல்லாம் தாய் மதம் இந்து மதம்..! ஆங்கிலேயர்கள் தான் இந்து என பெயர் வைத்தனர்- அண்ணாமலை


 

click me!