சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்.. வில் அம்பு யாருக்கு கிடைக்குமோ ?

By Raghupati R  |  First Published Oct 8, 2022, 11:33 PM IST

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் சட்ட சபையில் பெரும்பான்மையை இழந்த முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்களின் குழு, பாஜக இணைந்து, கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னவீஸ்சும் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். அதுமட்டுமில்லாமல், சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.

தற்போது மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் இரு அணிகளும் சின்னத்தை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில்தான் தற்காலிக உத்தரவாக இரு அணிகளும் சிவசேனாவின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சின்னம் முடக்கப்பட்ட நிலையில், மும்பையின் அந்தேரி கிழக்கில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரு அணியும் வேறு பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது. சிவசேனாவின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’

click me!