எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் டீமுக்கு முன்னாள் எம்.பி தாவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
யார் அதிமுகவின் தலைமை என்று நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.
கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளும், இரட்டை தலைமை அல்லது ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகளும், வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்த நிர்வாகிகள், ஒவ்வொருவராக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வந்தனர். நீதிமன்றத்துக்கு சென்ற இரண்டு தரப்பும் மாறி மாறி தனக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்று வருகிறது. ஆனால் முடிந்தபாடில்லை.
இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தற்போது ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.
அப்போது பேசிய மைத்ரேயன், ‘புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாரிசு ஓபிஎஸ். 2017 ஆம் ஆண்டு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருடன் இருந்தேன். யானைக்கும் அடி சறுக்கும். எனக்கு புத்தி பேதலித்து போனது.
வேலியை தாண்டிய வெள்ளாடாக மாறினேன். இபிஎஸ் அணியில் சேர்ந்து 108 நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பி உள்ளேன். அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை அண்ணன் ஓபிஎஸ் மட்டும்தான்’ என்று பேசினார்.
இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !