தெலுங்கானா மாநிலத்தை மட்டுமல்ல, டிஆர்எஸ் கட்சியையும் ஆட்டம் காண வைத்துள்ளார் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.
பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் முக்கியமானவராக இருக்கிறார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கிறது. இந்த நிலையில் தெலங்கானாவிற்கு கவர்னராக தமிழிசை சௌந்தரராஜனை நியமித்தது மத்திய அரசு.
இந்நிலையில் கடந்த மாதம் தெலங்கானாவின் கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அப்போது கவர்னர் மாளிகையில் பேசிய தமிழிசை, ‘முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும், அவர் கவர்னர் மாளிகைக்கு வர மறுக்கிறார். உண்மையான அன்புடன் மக்களுக்கு பணியாற்ற விரும்பினேன். ஆனால் அந்த முயற்சிக்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
எனது நடவடிக்கைகளில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது. நான் ஆக்கபூர்வமானவளே தவிர சர்ச்சைக்குறிய நபர் அல்ல. சிறந்த நட்புணர்வு அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும். திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளாதது தவறு. அனைத்து முதல்வர்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !
கூட்டத்தில் கலந்துகொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அனைத்து மாநிலங்களிலும் குடியரசுதின அணிவகுப்பு நடந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது. மக்களுக்கு உரையாற்றுவது தொடர்பாக அதிகாரிகளை அணுகிய போதும் எந்த பதிலும் இல்லை. இதனால், நானே உரை தயாரித்து அதனை பேசினேன்.
பேசுவதற்கு உரை தராவிட்டால் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் ? பேச எனக்கு உரிமை இல்லையா ? அவர்கள் பேசுவதை மட்டும்தான் நான் பேச வேண்டுமா ? முதல்வரோ அல்லது அந்தக் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் கவர்னர் மாளிகைக்கு வருவதில் என்ன தடை இருக்கிறது ? கவர்னர் மாளிகை என்ன தீண்டத்தகாத இடமா ? அரசியல்வாதியாக இருந்தபோது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.
தற்போது கவர்னர் பதவி வகிக்கும் போதும் விமர்சிக்கப்படுகிறேன். நான் வலிமையானவள். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை யாராலும் தடுக்க முடியாது. ஆசியாவின் மிகப்பேரிய மலைகிராமத் திருவிழாவான, ’சம்மக்கா சாரலம்மா ஜாதரா’ என்ற தெலங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் பழங்குடியினர் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் கேட்டபோதும் கடைசி நிமிடம் வரை தரவில்லை. அதனால் 8 மணி நேரம் சாலை மார்க்கமாகவே சென்றேன்.
இதையும் படிங்க..மொபைல் & டிவிக்கு தடை போடும் அதிசய கிராமம்.. அடேங்கப்பா.!! கர்நாடகாவில் ஆச்சர்ய சம்பவம்
இப்படி கவர்னர் மாளிகை பல முறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது. மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் போதும் கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி-க்கள் எந்தவித வழிமுறைகளையும் பின்பற்றுவது கிடையாது. அதற்கான உத்தரவுகள் எங்கிருந்து வருகிறது என எனக்கு தெரியாது. அவர்கள் வராதது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. மாநில அரசில் உள்ள சில பிரச்னைகளை எடுத்துக்கூறினேன்.
ஆனால் அதனை அவர்கள் கருத்தில் எடுத்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியாது. கவர்னர் எங்கும் செல்லக்கூடாது எனக்கூறுகின்றனர். ஆனால் கவர்னருக்கு எந்த எல்லைகளும் கிடையாது. மக்களுக்கு பணியாற்றுவதே எனது நோக்கம். நான் ஒரு பெண் என்பதாலேயே என்மீது தெலங்கானா மாநில அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும்’ என்று கூறினார்.
இந்த செய்தி தெலங்கானா மாநிலத்தில் அப்போது பெரிய பிரேக்கிங் செய்தி ஆகியது. தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது தெலங்கானாவில் சாதாரண பொம்மை ஆளுநராக இருப்பார் என்று, டிஆர்எஸ் கட்சியின் தலைமை கணக்குப்போட்டது. ஆனால் தற்போது மாநிலத்தையே ஆட்டம் காண வைத்துள்ளதால் தெலங்கானா அரசியல் வட்டாரங்கள் பரபரப்புடன் காணப்படுகிறது.
இதையும் படிங்க..ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சவுதி பணக்காரர்கள் ஏன் இல்லை தெரியுமா? வெளியான ஆச்சர்ய தகவல் !