“அடுத்து பேருந்து கட்டணம் உயரும்..திறமையற்ற ஆட்சி, மக்கள் பாவம்”- ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி !

By Raghupati RFirst Published Aug 8, 2022, 8:49 PM IST
Highlights

சொத்துவரியையும் அரசு உயர்த்தியிருக்கிறது. குடியிருப்புகளுக்கு நூறு சதவீதம், கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பழநி பால தண்டாயுதபாணி கோயிலில் பாலசுப்பிரமணி அலங்காரத்தில் இருந்த மூலவரை தரிசனம் செய்தார். தொடர்ந்து அரை மணி நேரம் மலைக்கோயிலில் உள்ள வரவேற்பாளர் அறையில்  காத்திருந்த அவர், வேடர் அலங்காரத்தில் இருந்த மூலவரையும் தரிசித்தார். சிறுகாலசந்தி மற்றும் காலசந்தி பூஜைகளிலும் பங்கேற்று, முருகனை தரிசனம் செய்தார். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் தரிசனம் அதிமுகவில் குறிப்பாக ஓபிஎஸ் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்நிலையில் இன்று சேலத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்தேன். பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. மக்கள் துன்புறும்போது, மக்கள் பாதிக்கப்படாதவாறு, அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான கொரோனா தொற்று, வேலைவாய்ப்பு கிடையாது, வருமானம் கிடையாது. 

இந்த சூழலில், மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை பெரும் சுமையாக மக்கள் கருதுகின்றனர். அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். சொத்துவரியையும் அரசு உயர்த்தியிருக்கிறது. குடியிருப்புகளுக்கு நூறு சதவீதம், கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது. மக்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள். ஒருபக்கம் மின்கட்டண உயர்வு, இன்னொரு பக்கம் சொத்து வரி உயர்வு, விரைவாக பேருந்து கட்டணமும் உயரப்போகிறது.

மேலும் செய்திகளுக்கு..“ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !

தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று சாக்கு போக்கு சொல்லி மக்களை திசைத்திருப்ப பார்க்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு வருமானமே இல்லை. பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளுகின்ற வரை இந்த கட்டணங்களையெல்லாம் உயர்த்தக் கூடாது. இதுதான் ஒரு அரசின் கடமை. மக்களின் பொருளாதார நிலையை உணர்ந்து இந்த அரசு செயல்பட வேண்டும். 

ஒரு நிர்வாகத் திறமையற்ற அரசாகத்தான் திமுகவை மக்கள் பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சியில் சரியான முறையில் செயல்பட்டு மாணவர்களின் விலை மதிக்கமுடியாத உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். அதேபோல், செயலற்ற திறமையற்ற ஒரு முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்வதால், போதைப்பொருட்கள் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

click me!