அவங்க எடப்பாடியின் கொத்தடிமைகள்.. உன்மையான அதிமுக நாங்க - இபிஎஸ் தரப்பை அலறவிட்ட ஓபிஎஸ் குரூப்

By Raghupati R  |  First Published Aug 8, 2022, 8:15 PM IST

ஒருபுறம் ஓபிஎஸ் தரப்பும், மற்றொரு புறம் எடப்பாடி பழனிசாமி தரப்பு நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள்.


ஒரு புறம் தாங்கள் தான் அதிமுக என்று கூறி எடப்பாடி தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மறுபுறம் ஓபிஎஸ் தரப்பும் அதேபோல பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளிலும் நியமித்து வருகிறார். இதற்கிடையே நேற்று காலை தான் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் உடன் தேனியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !

நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரையில் ஒன்றுகூடி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். ஒரே நேரத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் தரப்பால் மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட கோபாலகிருஷணன் இந்த பேரணியை நடத்தினார். அவர்கள் பேரணியாகச் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பிறகு அங்கு பேசிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷணன், ‘கடந்த ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி. அதிமுகவைப் பாதுகாக்கவும் இந்த கழகத்தின் தொண்டர்களைப் பாதுகாக்கவும் தான் ஓபிஎஸ் தலைமையில் தொண்டர்கள் அணி வகுத்து உள்ளோம். பன்னீர்செல்வம் பக்கம் உள்ளவர்கள் தான் தொண்டர்கள் அணியைச் சேர்ந்தவர்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்கள் டெண்டர் அணியைச் சேர்ந்தவர்களாகும். 

எதிர்ப்பக்கம் எடப்பாடி அணியில் உள்ளவர்கள் எல்லாரும் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். அவர்கள் இப்போது எடப்பாடி பழனிசாமியின் கொத்தடிமைகளாகவே உள்ளனர். அவர்களுக்குத் தொண்டர் பலம் எதுவும் இல்லை. நாங்கள் தான் தொண்டர்கள் ஆதரவுடன் பலமாக நிற்கிறோம். ஓபிஎஸின் இந்தப் படை எழுச்சியுடன் தமிழகம் முழுக்க புறப்படப் போகிறோம். ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஒரு தலைவர் ஓபிஎஸ் மட்டுமே. 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஜெயலலிதா வழிநடத்திய இயக்கத்தை ஓ. பன்னீர்செல்வத்தால் மட்டுமே தலைமை தாங்க முடியும். அதிமுக தொண்டர்களைப் பாதுகாக்கவே ஓபிஎஸ் தலைமை ஏற்றுள்ளார். வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் வென்று, நிச்சயம் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்பார். அதிமுக கூடிய சீக்கிரம் வடிகட்டப்படும். இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டால் அதிமுக தூய்மையாகிவிடும்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

click me!