ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்... நடந்தது என்ன? மக்கள் விளக்கம்!!

By Narendran SFirst Published Aug 8, 2022, 8:00 PM IST
Highlights

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகையால் ஆம்புலன்ஸை காத்திருக்க செய்த சம்பவம் சர்ச்சியாகிய நிலையில் அதுகுறித்து அப்பகுதி மக்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகையால் ஆம்புலன்ஸை காத்திருக்க செய்த சம்பவம் சர்ச்சியாகிய நிலையில் அதுகுறித்து அப்பகுதி மக்கள் விளக்கம் அளித்துள்ளனர். தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து டெல்டா பகுதிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் தனது வாகனம் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கார்களுடன் வந்து கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

அப்போது பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருந்தது. அமைச்சரின் வாகனங்கள் வந்த பிறகு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதுக்குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அமைச்சர் வருகையால் சைரன் ஒலித்துக்கொண்டிருந்தும் மறுப்பாதையில் ஆம்புலன்ஸை காத்திருக்க செய்த சம்பவம் தற்போது சர்ச்சியானது. இந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, நீண்ட நாட்களாகவே அணைக்கரை பாலம் ஒரு வழி பாதையாகத்தான் உள்ளதாகவும் ஒரு வழியில் வாகனங்கள் வந்து சென்ற பிறகே எதிர் திசையில் இருந்து வாகனங்கள் செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவுக்கு ஜால்ரா போடுற வேலை எல்லாம் வேணாம்.. சூரி முறையா மன்னிப்பு கேள்.. இந்து மக்கள் கட்சி .

இரண்டு பக்கங்களில் இருந்தும் வாகனங்கள் பாதி தூரத்தை கடந்துவிட்டால் வாகனங்கள் திரும்ப இயலாது என்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்படியே நின்றுவிடும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு இந்த நடைமுறை தான் பின்பற்றபடுகிறது என்றும் அமைச்சரின் வாகனம் பாலத்தில் நுழைந்து பாதி வழியில் வந்து கொண்டிருந்த போது தான் அங்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஆகையால் அந்த வாகனங்கள் செல்லும் வரை ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!