பாஜகவில் இணைந்தார் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்… சென்னை பாஜக உறுப்பினர்கள் பலம் 2 ஆக அதிகரிப்பு!!

By Narendran SFirst Published Aug 8, 2022, 7:02 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்துள்ளார். 

சென்னை மாநகராட்சி கவுன்சிலரா இருக்கும் லியோ சுந்தரம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கு பாஜக தனித்துப் போட்டியிட்டது.  அதன்படி, பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 134 ஆவது வார்டில் போட்டியிட்டு 5539 வாக்குகளை பெற்றார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு ஜால்ரா போடுற வேலை எல்லாம் வேணாம்.. சூரி முறையா மன்னிப்பு கேள்.. இந்து மக்கள் கட்சி .

இதன் மூலம் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரை 2036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக அடியெடுத்து வைத்தது. மேலும் பல இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் தற்போது 198 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: “ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !

முன்னதாக அதிமுகவில் இருந்த லியோ சுந்தரம் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் மண்டல தலைவர் பதவி கேட்டுள்ளார். அந்த பதவியை தர மறுத்த திமுக அவரை கட்சியிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்ததை அடுத்து சென்னை மாநகராட்சியில் பாஜக உறுப்பினர்களின் பலம் 2 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!