பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல்.முருகன் நடத்திய வேல் யாத்திரையை போன்று தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரையும் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளின் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முகாமை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் ஆகியோர் திருவண்ணாமலை, மெய்யூர், வாணாபுரம்,சதாகுப்பம் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்கள் குடும்பத்தின் பாரம் அறிந்து குடும்பத்தை நடத்துவது பெண்கள்தான் என்றும் ஆகவே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
undefined
வருகின்ற ஆண்டுகளில் பயனாளிகளின் எண்ணிக்கை பொறுத்து அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் தகுதியான நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுவார்கள். வேறு நபர்கள் யாரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய போவதில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 822 பொது விநியோக அட்டைகள் உள்ளன.
மாவட்டம் முழுவதும் 1627 பொது விநியோக கடைகள் இயங்கி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 991 முகாம்கள் அமைக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கண்காணிக்க 221 மண்டல அலுவலர்கள் 70 கண்காணிப்பு அலுவலர்கள், 20 பிரிவுகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று நான் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்தார்.
திமுக ஃபைல்ஸ் 2 வீடியோ ரீலீஸ்! ரூ.5600 கோடி ஊழல் பற்றி புட்டு புட்டு வைக்கும் அண்ணாமலை
மேலும் மத்திய பாஜக அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆன்மீகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை ஆன்மீகத்தையும், திராவிடத்தையும் இணைத்து தற்போதைய திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. திமுக ஆட்சியில் ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல கோவில்களில் புரணமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தி உள்ளோம்.
ஆன்மீகத்தை மையப்படுத்தி தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறது. முன்னாள் மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்தியும் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. திமுக தான் ஆட்சிக்கு வந்தது. தற்போது அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.