ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் பதவி மட்டுமல்ல, எம்எல்ஏ பதவியும் பறி போய்விடும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம், ராஜா வீதியில் பாஜக மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மண்டல அலுவகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றியும், மகளிர்கள் சுலபமாக நாப்கின் பெற வசதியாக தானியங்கி நாப்கின் வழங்கும் மிஷினை இயக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலிலுக்கு கட்சியினுடைய செயல்பாடுகள் முழுமையாக தொடங்கிவிட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் மண்டல அலுவலகம் தொடங்கி, மக்களின் கோரிக்கைகள், தேவைகளை அறிந்து செயல்படவும், கட்சியின் செயல்பாடுகள், மோடியின் சாதனைகளை விளக்க வேண்டும் என்றார்.
25 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
தென் தமிழகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன, அங்கே பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன்ராதாகிருஷ்ணன் உள்பட பலர் களத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பாதிக்க பட்ட மக்களை சந்திக்காமல் திமுக தலைவரும், முதல்வரான மு க ஸ்டாலின் டெல்லியில் இண்டியா கூட்டணி பற்றி பேச சென்றுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கோவை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் நிதி தந்தும், சாலைகள் சரியாக போடவில்லை. ஒப்பந்ததார்கள் மக்கள் வரி பணத்தை வீணடிக்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் விளக்க நோட்டீஸ் அனுப்பவே நேரம் சரியாக இருக்கிறது. மத்திய அரசு, நிவாரண நிதியாக 1200 கோடி ரூபாய் தந்தது. ஆனால் திமுக மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகின்றது. சென்னையில் பாதிக்கபட்டவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல், ஏமாற்றி, டோக்கன் மூலம் பணம் விநியோகிக்கப்படும் என்று கூறி பெண்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.
தென் மாவட்டத்தில் பாதிக்க பட்ட மக்களை பாதுகாப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி மீட்பு பணிகளுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல நிவாரண உதவிகளும் செய்து வருகின்றனர். திமுகவினர், எம்எல்ஏகள், அமைச்சர்கள் குற்றம் சுமத்த பட்ட நபர்கள் நல்லவர்களாக காட்டிக்கொள்கின்றனர். செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்தும், துறையில்லாத அமைச்சர் என நம்மை ஏமாற்றினர். அதே போல தான் பொன்முடி அமைச்சர் பதவி மட்டுமல்ல எம்எல்ஏ பதவியும் பறி போகும் நிலையில் தான் உள்ளார்.
5 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை
மத்திய அரசு, நிவாரண நிதியாக 1200 கோடி ரூபாய் தந்தது. ஆனால் திமுக மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகின்றனர். சென்னையில் பாதிக்க பட்டவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல், ஏமாற்றி, டோக்கன் தருகிறோம் என்றும் அதற்கு பணம், ரேஷன் கடையில் பெற நீண்ட வரிசையில் நிற்க வைத்து பெண்களை அலைக்கழித்து வருகிறார்கள்.