பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது 6 மாதம் கழித்து வரப்போகிற தேர்தலில் இந்த மழை வெள்ளத்தை வைத்து அறுவடை செய்ய நினைப்பதைவிட வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் மக்களை கை தூக்கி உதவுங்கள் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஒரே நாளில் 100 செ.மீட்டர் அளவிற்கு பெய் மழையால் மக்கள் செய்வதறியாமல் சிக்கியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் மக்கள் மீட்கும் பணியானது கடந்த இரண்டு நாட்களாக தொய்வு ஏற்பட்டது. தற்போது மழையானது நின்றுள்ளதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தென் மாவட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் .ரவி, மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
undefined
ஆளுநர் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு
இதனை தொடரந்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொண்ட நிலையில், இதில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லையென தெரிவிக்கப்பட்டது.
மேலும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்ததாக கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு சார்பாக ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில் மத்திய அரசோடு ஒன்றிணைந்து தான் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பேரிடர் காலத்திலும் அரசியல் செய்வதா.?
இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கவர்னர் ஆட்சி இல்லாதபோது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும், ஆட்சியில் உள்ள முதல்வர் சொன்னாதான் அதிகாரிகள் கேப்பாங்க மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கே முழு அதிகாரம். இந்த பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது 6 மாதம் கழித்து வரப்போகிற தேர்தலில் இந்த மழை வெள்ளத்தை வைத்து அறுவடை செய்ய நினைப்பதைவிட வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் மக்களை கை தூக்கி உதவுங்கள். அந்த தர்மம் உங்களை காக்கும் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்