இந்திக்கு அடிமையாகி விட்டதா திமுக.? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா.? நாராயணன் திருப்பதி

By Ajmal Khan  |  First Published Dec 20, 2023, 10:09 AM IST

ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் தி மு க விற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லையென நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


இந்தியா அணியின் ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டது. மேலும் தேர்தலில் பிரிந்து சென்று வாக்குகளை சிதறவிடாமல் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். 

Latest Videos

undefined

இந்தி தேசிய மொழியா.?

இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் அவர்கள். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது தி மு க . தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் தி மு க, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும் மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது என்?

திமுகவிற்கு தகுதி இல்லை

தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி  ஹிந்திக்கு அடிமையாகி விட்டதா தி மு க ? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா தி மு க? உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் INDI கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை INDI கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும். ஆனால், ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் தி மு க விற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லையென நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்.. ஆர்.என்.ரவி தலைமையில் ஆலோசனை- பங்கேற்காத தமிழக அரசு- ஆளுநர் மாளிகை கவலை

click me!