70 ஆண்டு கால திராவிட அரசியல் 15 நாட்களில் சுக்கு நூறாக உடைந்து போனது - அண்ணாமலை விமர்சனம்

By Velmurugan sFirst Published Dec 20, 2023, 10:20 AM IST
Highlights

70 ஆண்டு கால திராவிட அரசியல் கடந்த 15 நாட்களில் சுக்கு நூறாக உடைந்துவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளதால் பாஜக கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். மழை வெள்ள பாதிப்பு இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் இந்தி கூட்டணி பேச்சுவார்த்தைக்காக  டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு தமிழக முதல்வர் மட்டும் செல்லாமல் அவரோடு மூத்த கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளார். மழை வெள்ளத்தால் தென்மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் முதலமைச்சர் எதையும் கண்டு கொள்ளாமல் இந்தியா கூட்டணி பேச்சு வார்த்தைக்காக தனது கட்சி மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி பயணம் செய்த சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே குறிப்பாக தென் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த 15 நாட்களில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்கள் திமுக அரசின் மீது மிகப்பெரிய கோவத்தில் உள்ளனர். சென்னை மற்றும் தென் மாவட்ட மக்களின் கோபம் 2024 தேர்தலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். பேரிடர் குறித்து நிலையான முடிவெடுக்க முடியாத நிலையில் தமிழக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.

தந்தை பெயரை வைத்து முதல்வரானதால் பேரிடர் போன்ற விஷயங்களில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் நிலையற்ற தன்மையில் தமிழக முதல்வர் இருந்து வருகிறார். வெள்ளம் பாதித்த இடங்களுக்கு தமிழக முதல்வர் செல்லாமல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வெள்ளம் குறித்து ஆய்வு செய்துள்ளார். பேரிடர் காலங்களில்  நடவடிக்கை எடுக்கும் அனுபவம் இல்லாத தன் மகனை களத்தில் இறக்கி ஆய்வு மேற்கொண்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறானது: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு

நிதி அமைச்சரை பின்னுக்கு தள்ளிவிட்டு உதயநிதி ஸ்டாலின் தனது பட இயக்குனரான மாரி செல்வராஜுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளார். உதயநிதி தன்னுடைய ஆய்வுக்கெல்லாம் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆக்ஷன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் போல. மூத்த அனுபவம் வாய்ந்த அமைச்சர்களான துரைமுருகன், கே.கே.எஸ்.ராமச்சந்திரன் போன்றவர்களை அனுப்பாமல் பேரிடர்கள் பற்றி ஒரு அனுபவமும் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வெள்ளம் பாதித்த இடங்களை சென்று ஆய்வு செய்ய சொன்னது தென் மாவட்ட மக்களிடம் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

நீர் வழி பாதைகள் உள்ள மணல்களை எல்லாம் மணல் கொள்ளை அடித்ததன் விளைவு தான் இந்த பேரிடருக்கு காரணம். தமிழ்நாடு மக்கள் இந்த இரண்டு ஆண்டு கால திராவிட அரசியலை பார்த்து விட்டார்கள். 70 ஆண்டுகால திராவிட அரசியல், அஸ்திவாரம் 15 நாட்களில் உடைத்து எறியப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே குப்பை கொட்ட முடியாத எல்.முருகன் இந்தியா கூட்டணியை விமர்சிப்பதா? நாராயணசாமி ஆவேசம்

வெள்ளம் பாதிக்கபட்ட 24 மணி நேரத்தில் மத்திய அரசு ஐந்து ஹெலிகாப்டர், 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பி மக்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. வடக்கு, தெற்கு என்று இவர்கள் தான் பேசி வருகிறார்கள். ஆனால் காப்பாற்ற வந்த வீரர்கள் வடக்கு, தெற்கு என்ற எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. அவர்கள் இந்திய ராணுவம் சீருடை அணிந்த ஒரே காரணத்திற்காக எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

வானிலை ஆய்வு மையம் என்பது மழை எவ்வளவு பெய்யும் என்பது குறிப்பிட்டு கூறத்தான் முடியும் தவிர எந்த அளவு பெய்யும், எந்த அளவு புயல் இருக்கும் என்று சரியான கணக்கீடுடன் கூற முடியாது. இதற்காகத்தான் முன்னாள் இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் சூப்பர் கம்ப்யூட்டர் உடன்  பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வானிலை ஆய்வு மையம் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். பின்னர் தியாகராஜனை இலக்கா மாற்றி அதனை தொடர்ந்து சூப்பர் கம்ப்யூட்டர்களுடன் கூடிய நவீன வானிலை ஆய்வு மையத்துக்கான அந்த 10 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை என்றார்.

click me!