பாஜகவில் சேர்கிறார் ஓபிஎஸ்? பாஜக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல் !

By Raghupati RFirst Published Jul 2, 2022, 7:47 PM IST
Highlights

அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு

இதற்கிடையில், கடந்த 23ஆம் தேதி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஆனால், அதில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். 

இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஜூலை 11 பொதுக்குழுவிற்கு தடைகோரி நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக பதவிகளில் மாற்றம் கொண்டு வர தற்காலிக தடை கோரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!

ஓபிஎஸ் Vs இபிஎஸ்

நீதிமன்றத்தில் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தற்போது ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவில் ஓபிஎஸ் ?

இந்நிலையில் பாஜகவின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ‘ ஓபிஎஸ் பாஜகவில் இணைய விரும்புகிறார் என்கிற ஒரு கருத்து இருக்கிறது. அவர் இணைய வேண்டும் என்று விரும்பினால் தாராளமாக பாஜகவில் இணையலாம்.  திருமாவளவனின் ஆடை அலங்காரங்கள் சமூக நீதிதான். 

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!

அந்த சமூக நீதி ஆடைகள் தற்போது இல்லாமல் போய்விட்டது. மேடைகள் எல்லாம் சனாதனம் பற்றி அதிகம் பேசி இந்து மதத்தை ஒழிப்போம் என சொல்லி தற்போது யாருக்கு திருமாவளவன் ஆதரவு கொடுக்கிறார் என்று பார்க்க வேண்டும். ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார் திருமாவளவன்,  திருமாவளவன் சனாதனத்தை தவறாக பேசி மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார். 

திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் தேர்தலுக்கு பாஜகவின் சார்பாக திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டு இருக்கிறார். அந்த வகையிலும் சமூக நீதிக் கொள்கைக்கு உட்பட்டவர் . அவர் ஒரு பெண். பாஜக எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியிருக்கிறார்கள். நாங்கள் தற்போது ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்க  முன் வந்திருக்கிறோம்’ என்று கூறினார். 

மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !

click me!