ஆளுநரை செருப்பால் அடிப்பாங்க என கூறுவதா.! உதயநிதியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்குங்கள்.! சீறும் பாஜக

By Ajmal Khan  |  First Published Aug 21, 2023, 9:55 AM IST

Tamil Political News : அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநீதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நாரயணன் திருப்பதி இப்படி தரக்குறைவாக பேசிய உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டுள்ளார். 


நீட்- உதயநிதி உண்ணாவிரதம்

நீட் தேர்வு மசோதவிற்கு ஒப்புதல் அளிக்க கோரி திமுக சார்பாக தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக்கொண்டு இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

உண்மையாக நாம் கண்டனத்தை தெரிவித்து கொண்டிருக்கிறோம். இதுவரை ஆளுநருக்கு எதிராக அதிமுகவில் இருந்து யாராவது மூச்சாவது விட்டு இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பியவர், நீட் தேர்வால் 21 உயிர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். இது தற்கொலை கிடையாது. இது கொலை. இந்த கொலையை செய்தது ஒன்றிய பாஜ அரசு. அந்த கொலைக்கு துணை நின்றது அதிமுக. ஆளுநர் ஆர்.என். என கடுமையாக விமர்சித்திருந்தார். 

ஆளுநரை விமர்சித்த உதயநிதி

இந்தநிலையில் அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு?.. உங்களுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக  மக்களிடம் சொல்லுங்கள். "செருப்பை கழட்டி அடிப்பாங்க" என்று தமிழக முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரீகமான அரசியலும் கூட. செருப்பால அடிப்பாங்க என்ற சொல் வன்மத்திற்குரியது, சட்டத்திற்கு புறம்பானது. என்று பேசுபவருக்கு தான் திமிர் மற்றும் கொழுப்பு?

உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். pic.twitter.com/BdYMOZJ7U6

— Narayanan Thirupathy (@narayanantbjp)

 

செருப்பால் அடிப்பார்கள்

ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் 'செருப்பால் அடிப்பார்கள்' என்று அர்த்தம் என்றால், தி மு க எண்ணற்ற கணக்கான தேர்தல்களில் தோல்வியுற்றது உலகத்திற்கே தெரியும். 1980, 1984,1991 தேர்தல்களில் தோற்ற தி மு க வை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன். 2001, 2011,2016 தேர்தல்களில் படு தோல்வியடைந்தீர்களே? மக்கள் தி மு க வை செருப்பால் அடித்தார்களா என்று பொருள் கொள்ள வேண்டுமா? 2014ம் ஆண்டு மக்களைவை  தேர்தலில் மக்கள் தி மு கவை செருப்பால் அடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள்

மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்று கொண்டு தொடர்ந்து தி மு க தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா?  ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதலமைச்சரின் மகன் குடியரத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை  தரம் தாழ்ந்து தரம் கெட்டு 'செருப்பால் அடிப்பாங்க' என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதிர்ச்சியற்ற , அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநீதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என நாரயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

நீட் ரகசியம் உடைத்த உதயநிதி.. அடுத்த போராட்டம் டெல்லியில்!

click me!