எடப்பாடி பழனிசாமி புரட்சி தமிழரா..! மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- சீறும் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Aug 21, 2023, 6:19 AM IST

எடப்பாடி பழனிசாமி தமிழ் என்ற வார்த்தையை சரியாக உச்சரித்துவிட்டால் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விமர்சித்தார். 


தென் மாவட்டத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. இதற்கு போட்டியாக ஓ.பி.எஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரியில் அந்த அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், ஓ.பி.எஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மட்டும் மதுரையில் நடத்தியிருந்தால், அதிமுக மாநாடே நடந்திருக்காது. அதிமுக மாநாட்டில் தென் மாவட்டத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. பக்கத்து மாவட்டங்களில் இருந்து தான் பங்கேற்றார்கள் என கூறினார். 

Tap to resize

Latest Videos

செப்டம்பர் 3 முதல் சுற்றுப்பயணம்

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் புரட்சி தமிழர் என்ற பட்டம் என கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி தமிழ் என்ற வார்த்தையை சரியாக உச்சரித்துவிட்டால் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவதாக கூறினார். அவரை தொடர்ந்து பேசிய பண்ருட்டி இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்களால் ஓ.பி.எஸ்க்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.  இறுதியாக பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக பூத் கமிட்டி அமைக்க வேண்டும் எனவும், உறுப்பினர் சேர்ப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக மாநாடு தோல்வி

பொதுக்கூட்டம் என்ற ஒன்றை கன்றாவியாக ஒன்றை நடத்தி உள்ளத்காகவும், மூன்று நாட்களுக்கு முன் தயாரித்த புளியோதிரயை தந்து தொண்டர்களை  அசிங்கப்படுத்தியுள்ளதாக விமர்சித்தார். நாம்தான் அதிமுக என நிரூபித்து காட்ட வேண்டிய நிலையை நிர்வாகிகள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் கூட்டம் நடத்தப்படும் இந்த கூட்டங்கள் நிறைவு செய்த பின் உண்மையான மாநில மாநாடு நடத்தப்படும் என கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ், புரட்சி தமிழர் என எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், அதிமுக மதுரை மாநாடு தோல்வி அடைந்துவிட்டது அவர்களின் வேடம் களைந்திருக்கிறது என ஓபிஎஸ் கூறினார். 
 

click me!