நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி... சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ்யை முதல்வராக்குவோம்-அதிரடி தீர்மானங்கள்

By Ajmal Khan  |  First Published Aug 21, 2023, 7:10 AM IST

சட்ட சபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் மு.க. ஸ்டாலினை கண்டித்து அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி, 

1. செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், அதிமுக தொண்டாகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.

Tap to resize

Latest Videos

2. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடியார்க்கு வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டுகளும். 

3. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடியார் திகழ்கிறார். அம்மா அவர்களின் அரசியல் வாரிசு என நல்லாட்சியைத் தந்தவர். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்த பொதுச் செயலாளர்.

 

4. அதிமுவிற்கு இரண்டு கோடிகளுக்கு மேல் உறுப்பினர் சேர்க்கைக்காக அதிமுகவின் மாவட்ட / மாநில / பிற மாநில நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டும் நன்றியும். 

5  இந்திய திருநாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.

6  திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

7. தமிழக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்விக்காக மத்திய அரசை வலியுறுத்தல்.

8. தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

9. புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்

10. மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம். 

11. மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழக அரசுக்கு கண்டனம்.

12. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம். இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய விடியா அரசுக்கு கண்டனம்.

13. விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தமிழக அரசுக்கு கண்டனம்.

14. மேகதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழக அரசை கண்டித்து.

15. கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்து.

16. நினைத்ததை முடிப்பவன் நான் புரட்சித் தலைவர் பாடினார். அதன்படி நினைத்ததை முடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

17. தமிழகத்தில்தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

18. நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

19. உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

20. காவிரி குண்டாறு நதிகளின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து தீர்மானம்.

21. கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

22. பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

23. கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

24. மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் அங்கு அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தல்

25. கழக நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்

26. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

27. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

28. அம்மா ஜெயலலிதாவிற்கு சட்ட சபையில் இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் மு.க. ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.

29. கட்சியிலிருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமிக்கு பாராட்டு.

30. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி வந்து, மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

31. 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை.

32. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை தமிழக முதல்வராக்க சபதம் ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

click me!