ஒரு மருத்துவரா இருந்துக்கிட்டு இப்படி பேசலாமா? தமிழிசை சொன்ன கருத்துக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்

By Ramya s  |  First Published Jun 12, 2023, 8:01 PM IST

கர்ப்பிணிப் பெண்கள் ராமாயணம், மகாபாரதம் படித்தால் பிரசவத்தின் போது குழந்தை பிறப்பில் சிக்கல் இருக்காது என மருத்துவரான தமிழிசை சவுந்தர்ராஜன் பேசலாமா? அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். 


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சம்வர்த்தினி என்ற பிரிவு ‘ கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்த்ரராஜன் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய தமிழிசை “ கிராமப்புறங்களில், தாய்மார்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், நல்ல கதைகளையும் படிப்பதை பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில் கர்ப்பிணி தாய்மார்கள், கம்பராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தை படிக்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளது - வானதி சீனிவாசன் பேட்டி

Tap to resize

Latest Videos

கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டம் படிப்பது கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வது கருவில் உள்ள குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் யோகா செய்வது, தாய், குழந்தை இருவரின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துகிறது. சுக பிரசவத்திற்கும் உதவுகிறது.

இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தமிழிசை இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜீதா ஜீவன் “கர்ப்பிணி பெண்கள் ராமாயணம், படிக்கலாம். மகாபாரதம் படிக்கலாம். இசை கேட்கலாம். அதற்காக எளிதாக பிரசவம் ஆகும் என்று ஒரு மருத்துவர் எப்படி பேசினார் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

 

மருத்துவ படிப்புக்கான பொது கலந்தாய்வை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

click me!