ஆடு புலி ஆட்டத்தை ஆடத் தொடங்கிய டிடிவி - விக்கெட்டைப் பறிகொடுத்த அருண்குமார்

First Published Mar 15, 2017, 3:28 PM IST
Highlights
Arun Kumar from the post of district secretary of the AIADMK sacked


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அருண்குமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவினை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள். பலர் சசிகலா தலைமையும், ஒருசிலர் ஓ.பி.எஸ். தலைமையும் ஏற்று அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

கூவத்தூர் சொகுசு பங்களாவில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்று நாளிதழ்களில் பரபர செய்திகள் வெளியான போது, ஆம் அது உண்மை தான் என்று சாட்சி அளித்தவர் மதுரை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன்.

கடத்தப்பட்டோம், அடைக்கப்பட்டிருந்தோம், திகிலூட்டப்பட்டோம் என எம்.எல்.ஏ. சரவணன் அணுகுண்டுகளை அசால்டாய் தூக்கிப் போட்டிருக் கொண்டிருக்க எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சைலண்ட் மோடில் கோவை தப்பிச் சென்று ஸ்கோர் செய்தவர் எம்.எல்.ஏ. அருண்குமார்..

சட்டசபைடயில் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்த நாளன்று கோவையில், கூளாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்சியில் பிணக்குகளும் பிளவுகளும் வரக்கூடாது என்பது தான் என் நோக்கம், பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாக பணிபுரிய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். சசிகலா மீது மனக்கசப்பு இருந்தாலும் அதனை அவர் வெளிப்படுத்திய பாங்கு பன்னீர்செல்வத்தை வெகுவாகக் கவர்ந்த்தாகக் கூறப்படுகிறது….

இதனைத் தொடர்ந்து அருண்குமாரை தன் அணியில் சேர்க்க ஓ.பி.எஸ். தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருண்குமாரும் தன் விக்கெட்டை ஓ.பி.எஸ்.சிடம் சமர்பித்தார்.

இந்தச் சூழலில் அருண்குமார் வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக பறித்துள்ளது. இப்பதவியை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுன்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த ஒன்று தான் ஆனா இவ்வுளோ லேட்டா மிஸ்டர் டிடி.வி தினகரன்…

click me!