உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி என்ன ஆனது..? மூன்றில் ஒரு பங்காக குறைத்தது ஏன்..! அன்புமணி ஆவேசம்

By Ajmal KhanFirst Published Nov 21, 2022, 11:14 AM IST
Highlights

உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைவு ஏன் என விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

ஆண்டுக்கு 6ஆயிரம் நிதி உதவி

உழவர்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி திட்டத்தில் பயணாளிகளின் எண்ணிக்கை குறைந்தது ஏன் என விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 67% குறைந்திருப்பதாக வெளியாகி  உள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. உழவர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

சிறு மற்றும் குறு உழவர்கள் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களை வாங்குவதற்காக ஆண்டுக்கு 3 முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 வழங்கும் திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 11.84  கோடி ஆகும். அதன்பின் 45 மாதங்கள் ஆகி விட்ட நிலையில், இதுவரை 12 தவணைகளாக நிதி  வழங்கப்பட்டுள்ளது. 

கே.எஸ்.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.!டெல்லியில் புகார் மனுவோடு முகாமிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

ஆனால், முதல் தவணை நிதி வழங்கப்படும் போது 11.84 கோடியாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை கடந்த மே - ஜுன் மாதங்களில் 11-ஆவது தவணை நிதி வழங்கப்பட்ட போது பயனாளிகளின் எண்ணிக்கை 3.87 கோடியாக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி இந்த விவரங்களை மத்திய வேளாண்துறை வெளியிட்டிருக்கிறது. உழவர்களுக்கு மூலதன மானியம் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை மாநில அரசுகள் தான் அடையாளம் காண வேண்டும்; இத்திட்டத்திற்கான பயனாளிகள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். கடந்த 2019-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, தகுதியுள்ள அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் சேருவதற்கு வாய்ப்பிருந்தது. அதன்படி பார்த்தால் ஒவ்வொரு முறையும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். 

ஆனால், ஆறாவது தவணைக்கு பிறகு பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. குறிப்பாக பத்தாவது தவணையின் பயனாளிகள் எண்ணிக்கை 6.34 கோடி என்பது  11-ஆவது தவணையில் 3.87 கோடியாக, அதாவது கிட்டத்தட்ட பாதிக்கு பாதியாக குறைந்திருக்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 88.63 லட்சத்திலிருந்து வெறும் 12 ஆயிரமாக, அதாவது 99.90% குறைந்து விட்டது.

சத்தீஸ்கரில் 94.7%, பிகாரில் 91.80% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இது 46.80 லட்சத்திலிருந்து 23.04 லட்சமாக குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் மொத்த உழவர்களின் எண்ணிக்கை 79.38 லட்சமாகும். அவர்களில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு உழவர்களின் அளவு 93%, அதாவது 73.82 லட்சமாகும்.   இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது தகுதியுள்ள பயனாளிகளில் 58.63 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் மானியம் கிடைத்தது. இது 100% என்ற இலக்கை அடைந்தால் தான் அது இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும். 

அதிமுக பொதுக்குழு வழக்கு.. உச்ச நீதிமன்றம் இன்று என்ன உத்தரவு பிறப்பிக்கபோகிறது? ஓபிஎஸ், இபிஎஸ்.. திக்! திக்!

ஆனால், இந்தத் திட்டத்தின் தகுதியுள்ள பயனாளிகள் அளவு  இப்போது வெறும் 28% ஆக குறைந்து விட்டது. இது உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. உழவர்களுக்கான மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதை  ஒப்புக்கொண்டிருக்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் அதற்கான காரணம் என்ன? என்பதை  தெரிவிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய சமூகம் என்றால் அது உழவர்கள் தான். அவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

நடப்பாண்டில் இந்த வீழ்ச்சி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்கியதோ, அப்போதே அதற்கான காரணங்கள் என்ன? என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அதை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக வீழ்ச்சி தொடரும் நிலையில் அதற்கான காரணங்களை கண்டறிய மத்திய அரசு எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. மாநில அரசுகளும் தங்களின் பங்கிற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது சோகம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவிற்கு ஆதரவாக அதிமுகவை கரைக்கும் செயலில் எடப்பாடி பழனிசாமி..? திருமாவளவன் விமர்சனம்

click me!