பாஜகவிற்கு ஆதரவாக அதிமுகவை கரைக்கும் செயலில் எடப்பாடி பழனிசாமி..? திருமாவளவன் விமர்சனம்

By Ajmal KhanFirst Published Nov 21, 2022, 10:26 AM IST
Highlights

மாநில அரசு எடுக்க முடிவுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள் அதை உணராமல் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். பிஜேபி ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடியை தருகிறார்கள் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் ஜெய்பீம் படிப்பகம் அடிக்கல் நாட்டு விழா  வேலூர் மாவட்டம் அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வேலூர் வசந்தபுரம் பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை காலி செய்யும்படி ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் இருந்து தான் மக்கள் தினசரி கூலி வேலைக்காகவும் மற்றும் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.அவர்களுக்கு மாற்று இடம் வழங்கினாலும் கூட தற்போதுள்ள நிலைக்கு அவர்களால் வேறு இடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அப்பகுதி மக்களின் கோரிக்கையை ரயில்வே துறையினர் மறுபரிசலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அதிமுக 4ஆக பிளவு பட்டதாக கூறுகிறார்கள்.! ஆனால் திமுகவோ அமைச்சர்களால் 7 துண்டாகிவிட்டது - இபிஎஸ் ஆதரவாளர்

10% இட ஒதுக்கீடு என்பதுஅரசியலமைப்பு சட்டத்தின்படி தவிர்க்கக் கூடியதாகும் சமூக நீதியை நீர்த்துப் போகிற செயல். ஏழைகளுக்கு உதவுவதை யாரும் எதிர்க்கவில்லை முன்னேறிய சமூகமாக இருந்தாலும் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் ஏழைகளுக்கு இலவசமான கல்வி வழங்கலாம், கடன் உதவிகளை வழங்கலாம், கல்விக்கான உதவித்தொகை வழங்கலாம் தொழில் துவங்க கடல் உதவிகளை வழங்கலாம் இப்படி பல நல திட்டங்களை அரசு செய்யலாமே தவிர பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தி இருக்கிற சமூக நீதிக் கோட்பாடு சிதைக்கப்படும் வகையில் இந்த நிலைப்பாட்டை பாஜக அரசு செயல்பட்டு வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சி சீராய்வு  மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். 

சமூக நீதி கோட்பாட்டோடு தொடர்புடையது சமூக நீதி என்பது ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில் உருவானது அல்ல. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்ற அடிப்படையில் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சூத்திரர்களையும் அவர்கள் சார்ந்து வாழ்கின்ற தலித் கலையும் பழங்குடியினரையும் இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. அனைத்து பணிகளிலும் 80 சதவீதத்திற்கு மேல் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்ந்த ஜாதியினர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கூறுவது அப்பட்டமான பொய். 80 சதவீதத்தை பயன்படுத்தக் கூடியவர்கள் வாய்ப்பு மறுக்கப்படுகிறது அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. எனவே தான் பொருளாதார அளவுகோலாக சமூக நீதி அளவுகோலா என்பதே நாம் பார்க்க வேண்டும். ஏழையா பணக்காரனா என்பதை பார்க்க கூடாது என தெரிவித்தார். எனவே சங்பரிவார் உள் நோக்கம் சமூக நீதியை தகர்ப்பது என்பதுதான்.
ஆகவேதான் 10 சதவீத இட ஒதுக்கீடு உள்நோக்கத்தை விமர்சிக்கிறோம் என கூறினார். 

கே.எஸ்.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.!டெல்லியில் புகார் மனுவோடு முகாமிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடைவெளி ஏற்படுத்தப்படாமல் இருப்பதற்காக நியமிக்கப்படுகின்றனர்.இவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு பாலம் போன்றவர், மாநில அரசு எடுக்க முடிவுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள் அதை உணராமல் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். பிஜேபி ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடியை தருகிறார்கள். ஆர் எஸ் எஸ் தொண்டர்களாகவும் இருந்து பணியாற்றுகிறார்கள்.

பாரதிய ஜனதாவை பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளாரே என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  அதிமுகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருந்தால் அது வரவேற்கத்தக்க வகையில் இருக்கும், ஆனால் அவர் பிஜேபியின் ஆளாகத்தான் பேசுவதாக விமர்சித்தார்.  அதிமுகவை கைவிட்டு விட்டார். அதிமுகவைத் கரைந்து போக செய்துள்ளார் என்று தான் தோன்றுகிறது என திருமாவளவன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

100 நாட்களில் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்..! செந்தில் பாலாஜி உறுதி

click me!