சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து..! கிஷோர் கே சாமியை அதிரடியாக கைது செய்த போலீஸ்

By Ajmal KhanFirst Published Nov 21, 2022, 9:40 AM IST
Highlights

ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டிற்காக கிஷோர் கே சாமியை  பாண்டிச்சேரியில் வைத்து போலீசார் இன்று  காலை கைது செய்துள்ளனர்.

சர்ச்சை கருத்து- கிஷோர் கே சாமி

சமூக வலை தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி தினந்தோறும் பதிவிட்டு வருவார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை விமர்சித்தும் கருத்துகளை தெரிவிப்பார். இந்தநிலையில் கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துகள் பதியப்பட்டது. இதனை தமிழக சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். அதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருக்கும் கிஷோர் கே சாமி பதிவு செய்த டுவிட்டர் தகவலில் இஸ்லாமிய ஜமாத் அமைப்பினரை விமர்சித்து பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கே.எஸ்.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.!டெல்லியில் புகார் மனுவோடு முகாமிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

போலீசார் வழக்கு பதிவு

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பெய்த கன மழை பாதிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனை விமர்சிக்கும் வகையில் கிஷோர் கே சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பினர். நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ்கள் அனுப்பியும் ஆஜராக இல்லை என கூறப்படுகிறது.

அதிமுக 4ஆக பிளவு பட்டதாக கூறுகிறார்கள்.! ஆனால் திமுகவோ அமைச்சர்களால் 7 துண்டாகிவிட்டது - இபிஎஸ் ஆதரவாளர்

புதுச்சேரியில் கைது

இதனையடுத்து  முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டிற்காக கிஷோர் கே சாமி முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக தலைமறைவாகியிருந்த கிஷோர் கே சாமியை இன்று அதிகாலை புதுச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கு.. உச்ச நீதிமன்றம் இன்று என்ன உத்தரவு பிறப்பிக்கபோகிறது? ஓபிஎஸ், இபிஎஸ்.. திக்! திக்!

click me!