கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ இன்று முதல் வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை மோடி அரசை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கத்தை துவக்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் குழுக்கள் அமைத்து 50 இலட்சம் வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து மோடி அரசின் மோசமான கொள்கை, பொருளாதாரம், மத அரசியல் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.
undefined
மேலும் செய்திகளுக்கு..யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!
செப்டம்பர் 5 -ந் தேதி நிறைவு நாளில் சென்னையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் அடிக்கடி எதற்கு டெல்லிக்கு போய் வருகிறார் என தெரியவில்லை.மாநில ஆளுநர் மாநில அரசு திட்டங்களுக்கு ஒப்பதல் அளிக்கலாம். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை தமிழக அரசே எடுத்து கொள்ள வேண்டும் என சட்ட திருத்த மசோதா ஏப்ரலில் நிறை வேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பட்டன.
ஆளுநர் ஒப்புதல் கொடுக்க முடியாது என திருப்பி அனுப்புகிறார்.துணைவேந்தர்களை அரசு நியமித்தால் அரசியல் தலையீடு, முறைக்கேடுகள் நடக்கும். ஆளுநர்களால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களே முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஆளுநர் பல்கலைக்கழகங்களை வைத்துக்கொண்டு மாநில அரசுக்கு எதிராக போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார்.
பிஜேபிக்காக அதிமுக என்றைக்கு காவடி தூக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்தே பாஜக கட்டுப்பாட்டுக்குள் அதிமுக வந்து விட்டது. அதிமுக ஒன்றாக இருந்தாலும், மூன்றாக இருந்தாலும் பாஜக கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க போகிறது. அதிமுகவை பலவீனப்படுத்தி முழுமையாக தனது கட்டுப்பாட்டுகள் வைத்துக் கொள்ள பா.ஜ.க நினைக்கின்றது. அதிமுகவிற்குள் நடக்கும் கோஷ்டி சண்டை பாஜகவிற்கு உதவி செய்கிறது’ என்று கூறினார். இதற்கு முன்னதாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு..மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.! மருத்துவ தம்பதியின் சூப்பர் ஐடியா !
அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், ‘ காதல் என்பது சாதி,மதங்களைக் கடந்தது ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, ஆதலால் இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.என்னுடைய குடும்பத்தில் அனைவருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். காலநேரம் பார்த்து, பல்வேறு சடங்குகள் செய்து நடைபெறும் திருமணங்கள் கூட ஆறு மாதங்களில் நீதிமன்ற வாசலில் சென்று நிற்கிறது’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி