உதயகுமார் ஊழல் பட்டியல் ரெடி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஓகேவா ? மிரட்டும் கோவை செல்வராஜ்

Published : Jul 16, 2022, 04:37 PM IST
உதயகுமார் ஊழல் பட்டியல் ரெடி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஓகேவா ? மிரட்டும் கோவை செல்வராஜ்

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு சரமாரியாக பதிலடி கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் முதல் அதிமுக பொதுக்குழு வரை சர்ச்சைகளால் சுற்றி சுழன்று வருகிறது அதிமுக. ஒருபக்கம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க, மற்றொரு பக்கம் ஓபிஎஸ் அதிமுக நிர்வாகிகளை நீக்கி வருகிறார்.  

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ’அதிமுகவின் வரலாறு தெரியாத செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஒ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அதிமுக துவங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக உழைத்த குடும்பம் தங்களது குடும்பம் என்ற வரலாறு கைக்கூலியாக உள்ள கோவை செல்வராஜ் போன்றவர்களுக்கு தெரியாது’ என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

மேலும் செய்திகளுக்கு..மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?

இந்நிலையில் இதுகுறித்து பதில் அளித்து இருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ். சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், ‘எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முறையாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை  அழைத்து பேசாமல், தங்கமணி வேலுமணியை வைத்தே கூட்டணி பேசினார்.

அதுமட்டுமின்றி தனியாகவே வேட்பாளர்களை தேர்வு செய்தார். இவற்றை அன்றே ஓபிஎஸ் வெளியில் பேசி இருந்திருந்தால் கட்சி பிளவு பட்டிருக்கும். துரோகங்களை தாங்கிக்கொண்டு ஓ பன்னீர் செல்வம் கட்சி பணி செய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 80 தொகுதியில் அதிமுக தோல்வி அடைய காரணம் எடப்பாடி பழனிசாமி செய்த உட்கட்சி துரோகம் தான். வரும் திங்கட்கிழமை புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர் செல்வம் நியமிப்பார். அதிமுகவின் வேட்பாளர்களுக்கு எதிராக சதி செய்தவர்களின் பட்டியலை நான் வெளியிடுகிறேன். 

மேலும் செய்திகளுக்கு..நான் பணக்காரி இல்லை.. ஒன்றரை கோடி காரை மகனுக்கு பரிசாக கொடுத்த ரோஜா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து அரவணைத்து சென்றவர் ஓபிஎஸ். உதயகுமார் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துத்துள்ளார், அம்மா பெயரில் கோவில் கட்டிய இடத்தில் தனது தந்தையை அடக்கம் செய்து சுடுகாடு ஆக்கிவிட்டார். லஞ்ச ஒழிப்பு துறையில் உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன்.ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் மாதிரி. அவர் ஒரு சர்க்கஸ் கோமாளி. ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாக வில்லை. கொரோனா நெகடிவ் என்று வந்துள்ளது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!