பள்ளி மாணவி மர்ம மரணம்.. வெடித்த போராட்டம்.. டுவிட்டரில் #JusticeForSrimathi ஹேஷ்டேக் ட்ரெண்டிங்..!

By vinoth kumarFirst Published Jul 16, 2022, 3:17 PM IST
Highlights

மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

சின்னசேலம் நகரிலுள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி, நேற்று முன் தினம் அதிகாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் மர்ம மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என கூறி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன் என  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- இந்த தனியார் பள்ளியில் என்ன நடக்குது.. 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம்.. பகீர் கிளப்பும் அன்புமணி.!

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் அவர் எப்படி இறந்தார் வேண்டும். மேலும் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிய மாணவியின் சாவிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும். 

இதையும் படிங்க;- கோமாளி கூடாராம்.. 'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்கும் நேரம் வந்துடுச்சு.. இபிஎஸ்ஐ இறங்கிய அடிக்கும் OPR.!

 

மாணவி ஸ்ரீ மதி போலவே ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவி ஸ்ரீ மதி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, டுவிட்டரில்  #JusticeForSrimathi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.  

இந்நிலையில்  இன்று சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவியின் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தை கட்டுபடுத்த சின்னசேலம் அருகே போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சுடு நடத்தினர். இதனிடையே போராட்டக்காரர்கள், காவல்துறையினர் கல்வீச்சு தாக்குதல் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த காவலர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வாகனம், பள்ளி வாகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து உள்ளனர். 

click me!