விபத்தில் படுகாயமடைந்த தம்பதி.. பதறிப்போய் ஓடிடோடி வந்து உதவிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!

By vinoth kumar  |  First Published Jul 16, 2022, 2:09 PM IST

அன்னூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


அன்னூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர், கிருத்திகா. இவர்கள் இருவரும் காரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்தனர்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி கையில் 40 எம்.எல்.ஏக்கள்.. மகாராஷ்டிராவை போல் தமிழகத்தில் அது நடக்கும்? அலறவிடும் பிரமுகர்.!

அப்போது, குருக்கிலியம்பாளையம் அருகே எதிர்பாராத விதமாக இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பல்லடத்தை சேர்ந்த தம்பதி படுகாயமடைந்தனர். மற்றொரு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அப்போது, நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து விட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக மின்சாரம் மற்றும்  ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை கண்டதும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக அவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தார். அவர்களுடன் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திமுகவினரையும் அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க;-  சவால் விட்டீங்களே எதையாவது உருப்படியா செஞ்சீங்களா? திமுகவை திக்கு முக்காட செய்யும் அண்ணாமலை..!

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

click me!