அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !

By Raghupati R  |  First Published Jun 17, 2022, 11:14 AM IST

AIADMK : கடந்த 4வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்  தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை செய்தார்.


அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு  யுக்திகளை கையாண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை  வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எதிர் கோசம்  எழுப்பினர்.இதனால் சர்ச்சை வெடித்தது.  

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கடந்த 4வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்  தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை செய்தார். பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றார். அங்கு வந்த அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அதிமுக பொது செயலாளர் இபிஎஸ், வருங்கால முதல்வர், அதிமுகவின் ஒற்றை தலைமையே' என்று எடப்பாடி பழனிசாமியை போற்றி புகழ்ந்து, சிறப்பான வரவேற்பை கொடுத்தனர் அதிமுக தொண்டர்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட இந்த வரவேற்பு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொள்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் தற்போது சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட உற்சாக வரவேற்பு அவர்கள் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

click me!