#BREAKING : நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

By Raghupati RFirst Published Jun 17, 2022, 10:47 AM IST
Highlights

Rajiv Gandhi Case : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை 2014ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது என்று கூறி இவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாககுறைக்கப்பட்டது. இதையடுத்து 31 வருடம் சிறையில் இருந்துவிட்டதால், ஆயுள் தண்டனையில் இருந்து, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்தார்.

அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இதே வழக்கில் பேரறிவாளன் கடந்த மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.பேரறிவாளன் வழக்கில் வைக்கப்பட்ட அதே வாதங்களை இந்த வழக்கிலும் தமிழ்நாடு அரசு வைத்தது. 

நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்த விடுதலை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தை போல அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்க உத்தரவிட முடியாது. தங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

click me!