அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், பெருபான்மையான பொதுக்குழு ஆதரவு நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது பொதுச்செயலாராகி விட வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தேனி முன்னாள் எம்.பி. பார்த்திபன், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமராஜ் உள்ளிட்ட 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது ஒபிஎஸ்-ஐ அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், பெருபான்மையான பொதுக்குழு ஆதரவு நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது பொதுச்செயலாராகி விட வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழு ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- எனக்கு பல கோடி கடன் இருக்கு.. இந்த மருத்துவமனையை பேங்க்ல லோன் போட்டு தான் கட்றேன்.. முன்னாள் அமைச்சர் காமராஜ்
இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என ஓபிஎஸ் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடியும் எதுவும் பயனளிக்கவில்லை. இறுதியாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் படி உயர்நீதிமன்ற தனி நீதிபதியை அணுகி பொதுக்குழுவுக்கு தடை கேட்டு வழக்கு தொடுத்துள்ளார். ஒபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை திங்கள் கிழமை காலை 9 மணிக்கு வழங்கப்படும் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு 9.30 மணிக்கு நடைபெற உள்ள 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியுள்ளனர். யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரப்போகிறது என்ற அச்சத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர். இந்த பரபரப்புகளின் மத்தியில் ஒபிஎஸ்க்கு மற்றொரு அதிர்ச்சி வந்துள்ளது.
இதையும் படிங்க;- பொதுக்குழு காலை 9.30 மணிக்கு.. தீர்ப்பு 9 மணிக்கு.. நீதிபதி வைத்த செம்ம ட்விஸ்ட்.. பீதியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!
இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி பார்த்திபன், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமராஜ், கூடலூர் நகரச் செயலாளர் அருண்குமார், பழனிசெட்டிபட்டி நகரச் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலச்சந்தர், தனலட்சுமி சொக்கலிங்கம், பேரவை இணைச்செயலாளர் கரிகாலன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நாராயணன், தேனி ஒன்றிய துணைச்செயலாளர் தயாளன் ஆகிய பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திலேயே பொதுக்குழு உறுப்பினர்கள் அணி மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2,452 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க;- அதிமுக என்ன சாதி கட்சியா? கட்சி ஆபிசுக்கு கண்டிப்பா வருவேன் - பயமுறுத்தும் சசிகலா