ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள்.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumar  |  First Published Jul 9, 2022, 1:21 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 


பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

கடந்த 2012 மற்றும் 2013 ம் ஆண்டு மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடுகள் நடைபெற்றது. இரண்டு வருடமும் நடைபெற்ற மாநாட்டின் போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அப்போதைய பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி, முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நீங்க செய்து எந்த வகையிலும் நியாயமல்ல.. 14 மாதங்களில் 12 முறை விலை உயர்த்துவதா..மத்திய அரசை விளாசும் அன்புமணி

undefined

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்குகள் என்றார். மேலும், வழக்குகள் தொடர உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  சவால் விட்டீங்களே எதையாவது உருப்படியா செஞ்சீங்களா? திமுகவை திக்கு முக்காட செய்யும் அண்ணாமலை..!

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.  அதில்,பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். 

click me!