50 லட்சம் கொடுத்து கவுன்சிலர் ஆனேன், நீ வாய மூடுடா.. தூய்மை பணியாளர்களை அவமானப்படுத்திய DMK கவுன்சிலர் கணவர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2022, 12:02 PM IST
Highlights

50 லட்சம் கொடுத்து கவுன்சிலராகி இருக்கிறேன்.. என்கிட்ட நீ பேசாத வாய மூடுடா.. என தூய்மைப் பணியாளர்களை அவமானப்படுத்தும் வகையில் திமுக கவுன்சிலர் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

50 லட்சம் கொடுத்து கவுன்சிலராகி இருக்கிறேன்.. என்கிட்ட நீ பேசாத வாய மூடுடா.. என தூய்மைப் பணியாளர்களை அவமானப்படுத்தும் வகையில் திமுக கவுன்சிலர் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கவுன்சிலர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதலிருந்தே எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக இனி அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாது, திமுகவினரின் அராஜகம் தலைவிரித்தாடும் என தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த வரிசையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த கையோடு திமுக கவுன்சிலர்கள் பொறுப்பேற்றது முதல்  ஆங்காங்கே வசூல் வேட்டை அரங்கேறி வருவதாகவும், அதற்கான சில வீடியோ ஆதாரங்களையும் அதிமுகவினர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடசென்னையில் திமுக பெண் கவுன்சிலரின் கணவர் தங்கள் பகுதியில் வீடு கட்டும் ஒரு பெண்ணை மிரட்டி பணம் கேட்ட வீடியோ வைரல் ஆனது. இந்நிலையில் பலரும் அதை கடுமையாக கண்டித்து வந்தனர், முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு வசூல் வேட்டையில் ஈடுபடும் கவுன்சிலர்களின் வேட்டையாட வேண்டும் என  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், தமிழக முதல்வரும்  தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண் கவுன்சிலர்கள் தங்கள் பணிகளை அவர்களே செய்ய வேண்டும், தங்களுடைய பொறுப்புகளை வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாது எனவும் கூறி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் திமுக கவுன்சிலர் ஒருவர் தூய்மைப் பணியாளர்களை மிகத் தரம் தாழ்ந்தும், அவர்களை மிரட்டும் தொனியிலும் எதேச்சதிகாரமாக பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வேலூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை ஒருவர்  தரக்குறைவாகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அதில் பேசுபவர் தாமோதரன் என்பதும், வேலுர் மாநகராட்சி 44 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தவமணி என்பவரின் கணவன் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் அந்த வீடியோ காட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மிகவும் தரக்குறைவாக மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். நாங்கள் தவறாக எதுவும் பேசவில்லை என அந்தப் பணியாளர்கள் கூற நீ யாருடா என்ன பேசுவதற்கு, 50 லட்சம் செலவு செய்து கவுன்சிலராகி இருக்கிறேன், இவ்வளவு பணம் செலவு செய்து கவுன்சிலராக விட்டு போகிற வருகிறவர்களிடம் நான் பேச்சு வாங்க வேண்டுமா? என அவர் ஆக்ரோசமாக பேசியுள்ளார்.

அந்தப் பணியாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும், நீ பேசாத நீ மரியாதையா என் வார்டை விட்டுப் போய்விடு, என் வார்டில் வேலை செய்ய முடியும் என்றால் இரு, இல்லை என்றால் வாழாதீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நீ வா போ என்று நீ சொல்லக் கூடாது அதை நான் தான் சொல்ல வேண்டும் என அவர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

பொதுமக்கள் முன்னிலையில் இப்படி மரியாதை இல்லாமல் பேசாதீர்கள். எங்களை அதிகாரிகள்தான் வேலை வாங்க வேண்டும் நீங்கள் ஏன் இப்படி பேசுகிறீர்கள், எவ்வளவு வேலை செய்ய முடியுமோ அவ்வளவு தான் எங்களால் வேலை செய்ய முடியும் என அவர்கள்  தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை முன்வைக்க மேலும் அந்த கவுன்சிலரின் கணவர் என்கிட்ட எதிர்த்து பேசாத, கும்பல் சேர்க்காத, கையை நீட்டி பேசாத, என ஒட்டுமொத்த பணியாளர்களையும் கவுன்சிலரின் கணவர் சரமாரியாக திட்டித் தீர்த்துள்ளார்.

இந்த சண்டையை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இவர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவருக்கு கொடுக்கும் தண்டனை மற்ற கவுன்சிலர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

 

click me!