“முடிவு சரவெடி, இனி தான் அதிரடி” பாஜகவுடனான கூட்டணி முறிவை போஸ்டர் ஒட்டி கொண்டாடும் அதிமுக

By Velmurugan s  |  First Published Oct 13, 2023, 10:07 AM IST

கோவை நகரில் "கூட்டணி முடிவு சரவெடி" "இனி தான் அதிரடி" என்ற வாசகங்களுடன் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.


தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக சமீபத்தில் வெளியேறியது. இந்நிலையில் மீண்டும் பாஜக அதிமுக இடையே கூட்டணி ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்தார். 

பெற்றோர் ரயிலில் அழைத்துச் செல்லாததால் ஏமாற்றம்; கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுவன் தற்கொலை

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் "கூட்டணி முடிவு சரவெடி" என்றும் "இனிதான் அதிரடி" என்ற வாசகங்களுடன் 40க்கு 40 என்று மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறிப்பிட்டு அதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை லங்கா கார்னர், டவுன்ஹால், காந்திபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. 

காப்பகத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

"கூட்டணி முடிவு சரவெடி" என்ற வாசகங்கள் பாஜகவுடன் கூட்டணியை முழுமையாக முறித்து கொண்டதை  குறிக்கும் விதமாகவே தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். பாஜகவுடனான கூட்டணி முறிந்தாலும் பாஜக குறித்தோ, பாஜக தலைவர்கள் குறித்தோ யாரும் கருத்துக் கூறக் கூடாது என அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

click me!