அதிமுகவில் அதிரடி மாற்றம்.. செல்லப்பாண்டின் பொறுப்பில் இருந்து நீக்கம்.. இதுதான் காரணமா?

By vinoth kumar  |  First Published Oct 13, 2023, 7:12 AM IST

திமுகவினர் தொடுத்த வழக்கில் இருந்து சி.த.செல்லப்பாண்டியன் பின் வாங்கியதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


அதிமுகவின் அமைப்புச் செயலாளரான் செல்லப்பாண்டின் அப்பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.த.செல்லப்பாண்டின் அவர்களும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆ.இளவரசன் அவர்களும் இன்று முதல் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலின் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்.! பல்டி அடித்த அதிமுக மாஜி அமைச்சர்-ஜாமின் வழங்கிய நீதிபதி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வர்த்தக அணிச் செயலாளர் மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கழக  வர்த்தக அணி

 செயலாளர் - சி.த. செல்லப்பாண்டியன் (முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்)

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் -  ஆ. இளவரசன், Ex. M.P.(அரியலூர் மாவட்டம்), கோபி காளிதாஸ் (கோபிசெட்டிபாளையம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்)

கழக மருத்துவ அணி

துணைச் செயலாளர் - டாக்டர் V.P. ஈஸ்வரன், M.D., F.C.C., (சேலம் மாநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்) கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- பாஜகவுடன் கூட்டணி முறிவு..! அதிமுக பக்கம் திரும்பும் இஸ்லாமிய அமைப்புகள்- அதிர்ச்சியில் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. திமுகவினர் தொடுத்த வழக்கில் இருந்து சி.த.செல்லப்பாண்டியன் பின் வாங்கியதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!