நெடுஞ்சாலை உணவகங்களுக்கான டெண்டரில் முறைகேடு; அமைச்சர் சிவசங்கர் மீது சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Oct 12, 2023, 4:27 PM IST

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் பேருந்தை நிறுத்துவது தொடர்பான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மீது பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 


மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உள்ளிட்ட நான்கு பேர் மீது சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை உணவகங்களில் உணவுக்காகவோ, தின்பண்டங்களுக்காகவோ பேருந்துகளை நிறுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் டெண்டர்கள் விடப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் உணவகம் வைத்திருப்பவர்கள் போக்குவரத்துக் கழகங்களில் விண்ணப்பம் அளிப்பார்கள். 

Tap to resize

Latest Videos

சென்னை கூவம் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை; பைபர் படகு மூலம் தீயணைப்பு துறையினர் தேடல்

உணவகத்தின் உரிமையாளர்கள் ஒரு பேருந்துக்கு குறிப்பிட்ட கட்டணத்தை போக்குவரத்து கழகத்திற்கு கட்டுவார்கள். அரசுக்கு வருவாய் வரக்கூடிய நிலை என்பதால் யார் அதிக கட்டணம் கொடுக்க முன் வருகிறார்களோ அந்தத் தொகைக்கு தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விட்டுக் கொண்டிருந்தது கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள் 102 ரூபாய்க்கும் சாதாரண பேருந்துகள் 62 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் 102 ரூபாய் 62 ரூபாய் இருந்ததை விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துக்கு 75 ரூபாயும் சாதாரண பேருந்த்துக்கு 50 கட்ட வேண்டும்  என நிர்ணயித்தார். அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விரைவு போக்குவரத்து கழக பேருந்துக்கு 27 ரூபாயும் சாதாரண பேரனுக்கு 12 ரூபாயும் ராஜ கண்ணப்பனுக்கு கமிஷனாக சென்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கக்கூடிய சிவசங்கர் பதவியேற்ற பிறகு நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் பொலிட்டிக்கல் பி ஏ லூயிஸ் கதிரவன் என்பவரின் பினாமியான வேடசந்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மூலம் முறைகேடு நடைபெற்று வருகிறது.

அமைச்சரின் பினாமியான தங்கவேல் 27 உணவக உரிமையாளர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு டெண்டர் வாங்கித் தருகிறேன் எனக் கூறி தனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு ஜிபே மூலம் 25 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அவர்களிடம் பணம் பெற்றுள்ளார். 27 ஹோட்டல் உரிமையாளர்களின் டெண்டர்களை ஒரே இடத்தில் வைத்து டென்டர்க்கு விண்ணப்பித்துள்ளார் மேலும் இந்த டெண்டர்கள் அனைத்தும் ஈ டெண்டர் ஆக தான் கொடுக்க வேண்டும் ஆனால் அமைச்சரின் பினாமியான தங்கவேல் அனைவரிடமும் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாக டெண்டர்களை விண்ணப்பிக்க வைத்துள்ளார்.

ஒவ்வொரு உணவக உரிமையாளர்களிடமும் சென்று அமைச்சருக்கு ஒரு உணவகத்திற்கு 50 ஆயிரம் கொடுத்தால் தான் டெண்டர் உங்களுக்கு வழங்குவார் எனக் கூறி அனைவரிடமும் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவருடைய உதவியாளர் லூயி கதிரவன் அவருடைய பினாமி தங்கவேல் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுப்பதாக நேற்று தகவல் தெரிவித்திருந்தேன். ஆனால் லஞ்ச ஒரு ஒழிப்புத்துறை டிஜிபி அபைகுமார் சிங் புகாரை வாங்கவில்லை. தலைமையக டிஎஸ்பியிடம்  புகார் கொடுத்துள்ளேன். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வேன்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம் பொறியாளர்; துக்கத்தில் விபரீத முடிவு

இந்த முறைகேட்டில் எத்தனை கோடி என்பது முக்கியமல்ல ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பயணம் செய்யக்கூடிய அரசு பேருந்துகள் நிற்கக்கூடிய உணவகங்களில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்கும் தொகையை மக்களிடம் தான் வசூலிப்பார்கள் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

click me!