தே.ஜ கூட்டணிக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி.. டெல்லிக்கு போகும் அண்ணாமலை - டெல்லியின் பிளான் கைகொடுக்குமா?

By Raghupati RFirst Published Feb 1, 2023, 3:53 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த நிலையில் அண்ணாமலை டெல்லி செல்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இன்று அதிமுக இபிஎஸ் அணி அறிவித்தது. 

2 முறை எம்.எல்.ஏ.வாக தென்னரசுவை ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அதிமுக இபிஎஸ் அணி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் பணிமனை (அலுவலகம்) திறக்கப்பட்டது. 

இந்த தேர்தல் பணிமனைதான் இப்போது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதாகையில் பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெறவில்லை. அதேநேரம், அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதையும் படிங்க..ஓபிஎஸ் எடுத்த கடைசி அஸ்திரம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த பன்னீர் அணி !!

தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரிலேயே இந்த பதாகை வைக்கப்பட்டிருந்தாலும் அதில் பாஜக தலைவர்களின் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதில் காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தலைவர். காமராஜர், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சி, ராஜாஜி, நாராயணசாமி நாயுடு, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் படங்களும் இடம்பெற்றுள்ளன.

கூட்டணியில் பிரதான அங்கம் வகிக்கும் பாஜக தலைவர்களின் படம் அதிமுக தேர்தல் பணிமனை பதாகையில் இல்லாமல் இருப்பது அதிமுக - பாஜக இடையேயான சண்டை இறுதிக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பாஜகவின் நிலைப்பாட்டைதான் ஆதரிப்போம் என அறிவித்த இதர கூட்டணி தலைவர்களான ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை.

அதிமுக கூட்டணியின் பெயரில் மாற்றம் செய்துள்ளது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்  என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று இரவு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த நிலையில் அண்ணாமலை டெல்லி செல்கிறார்.  பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக கூறியிருந்த சூழலில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்தபின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேசிய ஜனநாயக கூட்டணி, தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியாக மாறியிருப்பது அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி இறுதிக்கட்டத்தை நெருங்கிணையுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க..Erode: ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக போட்டி? எடப்பாடி பழனிசாமி Vs ஓபிஎஸ் யாருக்கு ஆதரவு? - பாஜக முடிவு இதுதான்

click me!