பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக? கூட்டணி பெயரும் மாற்றம்! மோடியின் படமும் நீக்கம்! இபிஎஸ் அதிரடி.!

Published : Feb 01, 2023, 02:36 PM ISTUpdated : Feb 01, 2023, 03:03 PM IST
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக? கூட்டணி பெயரும் மாற்றம்! மோடியின் படமும் நீக்கம்! இபிஎஸ் அதிரடி.!

சுருக்கம்

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை. ஒரிரு நாட்களில் எங்களது முடிவு அறிவிக்கப்படும். எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அதுபற்றி கவலை இல்லை என்று பேசியது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியடைய செய்தது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்ததலில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவரின் படமும் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் சிவப்பிராசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ஆனால், தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுக தமிழக பாஜகவுக்காக வேட்பாளரை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், நேற்று பாஜக சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை. ஒரிரு நாட்களில் எங்களது முடிவு அறிவிக்கப்படும். எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அதுபற்றி கவலை இல்லை என்று பேசியது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியடைய செய்தது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, ஈரோடு - பெருந்துறை சாலையில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், தேர்தல் பணிக்குழுவில் அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு நடந்து கொண்டு இருந்தபோது அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார். இது தமிழக பாஜகவை அதிர்ச்சியடைய செய்தது. 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பாஜகவின் பெயரோ, பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவரின் படமும் இடம்பெறவில்லை. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஜெகன்மூர்த்தி படங்கள் இடம்பெற்றிருந்தன. கூட்டணியின் பெயரும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என மாற்றப்பட்டுள்ளது. இதனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
விஜய் கூட்டணி..! ஒன்றிணைந்த அதிமுக..! மிஸ்ஸானால் அதோகதி..! இருதலைக் கொள்ளியாய் இபிஎஸ்..!