அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம் இப்போது சுமார் 6 மாதங்களுக்கு மேலாக தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இரு பிரிவுகளாகவே பிரிந்து இயங்கி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் இரட்டை தலைமை கீழ் இயங்கி சமயத்தில் அதிமுகவால் எந்தவொரு தேர்தலிலும் பெரியளவில் வெல்ல முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தோல்வி தான்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபின் அதிமுகவின் நிலையே தலைகீழானது. அதுமட்டுமல்லாமல், இதுவரை அதிமுகவில் இப்படியொரு உட்கட்சி பூசலை யாரும் பார்த்திராத அளவுக்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கோஷ்டி பூசல் அடிமட்ட தொண்டர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று வரை இரண்டு பிரிவாக தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !
இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தங்கமணியும், வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். தங்கமணிக்கு முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அதிமுக இழந்தது.
ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாக தங்கமணி பேசியுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா ? இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு ? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது ? பிரிந்து இருக்கின்ற அதிமுகவினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு அதிமுகவை வலுப்படுத்த ஓபிஎஸ் தயாராக உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பாஜகவில் சேர தயாராக இருக்கிறார்கள். ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் இனி சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளனர். விரைவில் இந்த முறைகேட்டில் சிக்குவார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க..19 வயது பையனை திருமணம் செய்யும் 56 வயது பெண்.. அடேங்கப்பா.! இப்படியொரு காதல் ஜோடியா.!!
இதையும் படிங்க..திமுகவின் கைப்பாவையாக ஆளுநர்.! ஒருநாளும் நடக்காது.. திமுகவை எச்சரித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்