தமிழகத்தை பொறுத்தவரைக்கும் திமுகவினர் நீட்டுகின்ற கோப்புகளில் கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரி சென்று உள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், ‘புதுச்சேரியை பொருத்தவரைக்கும் முதல்வரும் கவர்னரும் இணைந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்ற நோக்கில் பணி செய்து வருகின்றார்கள். இந்திய அரசியல் சட்டப்படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமையும், சுதந்திரமும் உள்ளது. திமுக அரசு நீட்டுகிற கோப்புகளில் கையெழுத்திடும் கைப்பாவையாக ஆளுநர் இல்லை.
இதையும் படிங்க..தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!
கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்கிறார். அதனாலேயே தமிழக ஆளுநரின் செயல்பாட்டை திமுகவினர் விமரிசிக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் திமுகவினர் நீட்டுகின்ற கோப்புகளில் கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கவர்னர் திமுகவினரிடம் கேள்விகளை கேட்கிறார்.
இதனால் தான் அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். திமுகவின் கைப்பாவையாக கவர்னர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது ஒரு நாளும் நடக்காது’ என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
இதையும் படிங்க..Viral Video: எங்க வீட்டுக்கு போகணும், நான் வரமாட்டேன்.! திருமணத்திற்கு பிறகு கணவருடன் செல்ல மறுத்த பெண் !!
இதையும் படிங்க..19 வயது பையனை திருமணம் செய்யும் 56 வயது பெண்.. அடேங்கப்பா.! இப்படியொரு காதல் ஜோடியா.!!