2 நாட்கள் மழைக்கே தத்தளிக்கும் மதுரை.. முடங்கிபோய் கிடக்கும் நிர்வாகம்.. ஆளுங்கட்சியை அலறவிடும் RB.உதயகுமார்

By vinoth kumarFirst Published Nov 5, 2022, 2:34 PM IST
Highlights

தூத்துக்குடி சம்பவத்திற்கு முன்பும் பின்பும் பல்வேறு நிலைகளில் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது கிடையாது. வன்முறை தலை தூக்கிய பிறகுதான் அதிகாரிகள் அதுபோன்ற நிலையை எடுத்துள்ளார்கள் என்பது விளக்கியுள்ளனர். நடந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியான முன்னுதாரணமாக இருக்காது. 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள சூழ்நிலையில் தமிழக முழுவதும் நீர் தேங்கி தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் பேட்டியளிக்கையில்;- ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சர் என்ன சொல்லுகிறார் என்றால் தோழமைக் கட்சிகளை வைத்துக்கொண்டு பேச வைக்கிறார். சட்டமன்றத்திலும் பேச வைக்கிறார். அவர்கள் எல்லோரும் சொல்லிவைத்தது போல தலையாட்டி பொம்மைகளை போல முதலமைச்சர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதையே அவர்கள் சட்டமன்றத்தில் பேசி வருகிறார்கள். தூத்துக்குடி சம்பவத்திற்கு முன்பும் பின்பும் பல்வேறு நிலைகளில் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது கிடையாது. வன்முறை தலை தூக்கிய பிறகுதான் அதிகாரிகள் அதுபோன்ற நிலையை எடுத்துள்ளார்கள் என்பது விளக்கியுள்ளனர். நடந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியான முன்னுதாரணமாக இருக்காது. 

Latest Videos

இதையும் படிங்க;- கொளத்தூர் தொகுதியா.? குளம் ஊரா.? முதலமைச்சருக்கு சிங்சாங் அடிக்கும் சேகர்பாபு- ஜெயக்குமார் விளாசல்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள சூழ்நிலையில் தமிழக முழுவதும் நீர் தேங்கி தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுது போல் பச்சை பொய் பேசுகின்ற அமைச்சர்கள் இப்பொழுதும் பச்சை பொய் பேசி வருகிறார்கள். கோயம்புத்தூரில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனையை பேச முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்க மறுத்து வருகிறார். முதலமைச்சர் இல்லாத விஷயங்களை பேச மட்டும் முதலமைச்சர் வாய் திறக்கிறார் இருக்கக்கூடிய விஷயங்களையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் பேச மறுத்து வருகிறார். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் பேசி வருகிறார். நாங்கள் மற்ற மாநிலங்களை பார்க்கத் தேவையில்லை நாங்கள் தமிழகத்தை தான் பார்க்க முடியும். தமிழகத்தில் மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பொழுது துப்பாக்கி சூடு நடைபெற்றதே கிடையாதா? அப்பொழுதெல்லாம் அரசு அதிகாரிகளையோ முதலமைச்சரையோ பொறுப்பாக்கி உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். பிரதான எதிர்க்கட்சியின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.நாங்கள் நாடகம் போடக்கூடிய இயக்கம் அல்ல. திமுக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை சொல்லியது. ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. 

எதிர்க்கட்சி சொல்வது என்பது மக்கள் நலனுக்காக மட்டுமே தவிர எங்களுக்காக அல்ல. எங்கள் நலனுக்காக அல்ல. வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக முதல் முதலில் நிதி ஒதுக்கி செயல்பட்டு தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான். நீர் மேலாண்மை திட்டத்திற்கு உங்களுடைய ஆட்சிக்காலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தொலைநோக்கி திட்டம் தொடங்கியது உண்டா? எந்த அமைச்சர் வேண்டுமானால் பதில் சொல்லட்டும் இந்த கேள்வி என்பது எனக்கு அல்ல நாட்டு மக்களுக்காக கேட்கிறேன். மதுரை மாநகராட்சி நிர்வாகம் இன்று முடங்கி போய் கிடக்கிறது. இரண்டு நாட்கள் மழைக்கே மதுரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விடுகிறார்கள் மக்கள் யாரிடம் கோரிக்கை வைப்பது சட்டமன்ற உறுப்பினரிடமா அல்லது அமைச்சரிடமா மேயரிடமா என்று குழம்பி உள்ளனர் என ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க;-  2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

click me!