அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது.. அது எனக்கு கிடைத்துள்ளது.. இபிஎஸ்.!

By vinoth kumarFirst Published Nov 5, 2022, 8:54 AM IST
Highlights

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும்,  புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் இரு பெரும் தலைவர்களும் திரைத்துறையில் தோன்றி, வளர்ந்து மக்கள் இடத்திலேயே செல்வாக்கை பெற்று நாட்டை ஆண்டவர்கள்.  

அரசியல் முட்கள் நிறைந்த பாதை, அதில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது அது எனக்கு கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளையை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான தொடங்கி வைத்தார். இதனையடுத்து, பேசிய இபிஎஸ்;- சினிமா துறையில் தற்போது அரசியல் கலந்து வருகிறது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் ஏழைகளுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தனர். திரையுலகிற்கும் அதிமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 

இதையும் படிங்க;- 2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

என்னவென்றால் இரண்டு தலைவர்களும் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள். அது எந்த கட்சிக்குமே கிடைக்காது. எங்கள் இயக்கத்தை தோற்றி வித்தவர்களே இந்த கலைத்துறையை சேர்ந்தவர்கள் தான். புரட்சித் தலைவர் காலம் முதல் திரையுலகிற்கு பல்வேறு நன்மைகளை அதிமுக செய்துள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும்,  புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் இரு பெரும் தலைவர்களும் திரைத்துறையில் தோன்றி, வளர்ந்து மக்கள் இடத்திலேயே செல்வாக்கை பெற்று நாட்டை ஆண்டவர்கள்.  

இதையும் படிங்க;-  சொத்துவரி, மின் கட்டணம் வரிசையில் தற்போது பால் விலை உயர்வு.. திமுக அரசை தூக்கி எறியுங்கள்.. ஓபிஎஸ் ஆவேசம்..

சினிமா துறையில் நுழைவது எவ்வளவு கடினமோ, அதேபோன்று தான் அரசியலில் நுழைவது கடினம். திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால், அரசியலில் அப்படி இல்லை. ஒவ்வொரு படியாக ஏறி தான் இந்த நிலைக்கு வர முடியும். அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது, அது எனக்கு கிடைத்துள்ளது. அரசியலில் ஜொலிப்பது கடினம். அரசியல் முட்கள் நிறைந்த பாதை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  

இதையும் படிங்க;-  கொளத்தூர் தொகுதியா.? குளம் ஊரா.? முதலமைச்சருக்கு சிங்சாங் அடிக்கும் சேகர்பாபு- ஜெயக்குமார் விளாசல்

click me!